பண்டிகை வந்தாச்சு...!
பார்க்கும் கடைகளிளெல்லாம்
மனிதத் தலைகள்...!
எல்லாவற்றையும் வாங்கத் துடிக்கும்
சில முகங்கள்...!
எதையுமே வாங்க முடியாத
ஏக்கத்தில்
சில முகங்கள்...!
நினைத்ததை வாங்க முடியாத
கவலையில்
சில முகங்கள்..!
மொத்தத்தில்
முடிந்தவரை
கிடைத்தவரை
அனைத்தையும்
அள்ளிப் பையில் போட்டுக் கொண்டு
ஊரே காலிபண்ண தயாராகிறது...!
அடுத்த சில நாட்கள்
மூச்சுத் திணறலில்
சிக்கயிருக்கிறது
சென்னை...!
அது வழக்கம்போல
தான் தூக்கி வளர்த்த
மாற்றான் ஊர்ப் பிள்ளைகளை
பாதுகாப்பாக
வழியனுப்பிவிட்டு
அனாதையாய் பண்டிகையைக் கொண்டாடவிருக்கிறது...!
நிராதவராய் நிற்கும்
சென்னையே
நிம்மதித் துறவாதே...!
இது உனக்கு வாய்த்த
ஓய்வுக் காலம்...!
எப்பொழுதும் அரிதுயிலிலேயே
சுழலும் நீ
சில நாட்கள்
முழுவுறக்கம் கொள்...!
சென்னையே
ஓய்வுக் கொள்...!
சென்னையே
துயில் கொள்...!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment