இருளில் நெருங்கி வரும்
பூனைக் குட்டியின்
மிரட்சியான கண்களைப் போல்
பயமுறுத்துகிறது மூப்பு
மூப்பின் சாயலில் மரணம்
வாழ வேண்டும் என்ற ஆசையுடன்
மெல்ல மெல்லப் படருகிறது
உடலும் மனதும்
ஒன்றாக அதிர்வுறுகிறது
சுமந்த பிள்ளைகளுக்குச்
சுமையாகிறது உடல்
மக்கிப் போன நினைவுகளின்
நிரந்தர குப்பைத் தொட்டியாகிறது மனது
கேட்க நினைத்த இசை
இழவு வீட்டின் ஒப்பாரியாய் ஒலிக்கிறது
புரியாத வார்த்தைகளை விடப்
புரிந்த மௌனம் போதுமானதாக இருக்கிறது
எறும்பின் நகர்வும்
ஈக்களின் மொய்ப்பும்
கவனத்தில் பதிகிறது
மகனும் மகளும்
நான் பார்க்க மறுத்த இளம் பருவத்தின்
பிம்பங்களாய் இருக்கிறார்கள்
பேத்தியும் பேரனும்
நான் கவனிக்க மறந்த உலகத்தின்
பிரதிகளாய் வளர்கிறார்கள்
மிகச் சிக்கலான எளிமையாய்
நீள்கிறது தலைமுறை இடைவெளி
இறுக்கமும் வெறுமையும்
இனியா நண்பர்களாகிவிட்டன
பயணத்திலிருந்து என்னை இறக்கிவிட
முற்படுகிறது வாழ்க்கை
முடிவெடுப்பதற்குள் முடிந்துவிட்டது பயணம்
எல்லாமும் என்னைவிட்டு விலகுகிறது
ஒருகட்டத்தில் நானும் என்னைவிட்டு விலகிவிடுவேன்
கார்த்திக் பிரகாசம்...
பூனைக் குட்டியின்
மிரட்சியான கண்களைப் போல்
பயமுறுத்துகிறது மூப்பு
மூப்பின் சாயலில் மரணம்
வாழ வேண்டும் என்ற ஆசையுடன்
மெல்ல மெல்லப் படருகிறது
உடலும் மனதும்
ஒன்றாக அதிர்வுறுகிறது
சுமந்த பிள்ளைகளுக்குச்
சுமையாகிறது உடல்
மக்கிப் போன நினைவுகளின்
நிரந்தர குப்பைத் தொட்டியாகிறது மனது
கேட்க நினைத்த இசை
இழவு வீட்டின் ஒப்பாரியாய் ஒலிக்கிறது
புரியாத வார்த்தைகளை விடப்
புரிந்த மௌனம் போதுமானதாக இருக்கிறது
எறும்பின் நகர்வும்
ஈக்களின் மொய்ப்பும்
கவனத்தில் பதிகிறது
மகனும் மகளும்
நான் பார்க்க மறுத்த இளம் பருவத்தின்
பிம்பங்களாய் இருக்கிறார்கள்
பேத்தியும் பேரனும்
நான் கவனிக்க மறந்த உலகத்தின்
பிரதிகளாய் வளர்கிறார்கள்
மிகச் சிக்கலான எளிமையாய்
நீள்கிறது தலைமுறை இடைவெளி
இறுக்கமும் வெறுமையும்
இனியா நண்பர்களாகிவிட்டன
பயணத்திலிருந்து என்னை இறக்கிவிட
முற்படுகிறது வாழ்க்கை
முடிவெடுப்பதற்குள் முடிந்துவிட்டது பயணம்
எல்லாமும் என்னைவிட்டு விலகுகிறது
ஒருகட்டத்தில் நானும் என்னைவிட்டு விலகிவிடுவேன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment