நான் சேலம்
மேல்வீட்டுக்காரர் பரமக்குடி
கீழ்வீட்டுக்காரர் கடலூர்
காய்கறி கடைக்காரர் நாகர்கோவில்
மளிகைக் கடைக்காரர் திசையன் விளை
டீக்கடைக்காரர் பாலக்காடு
பழக்கடைக்காரர் செஞ்சி
தண்ணீர்க்கேன் போடுபவர் ஈரோடு
சைக்கிள் கடைக்காரர் அறந்தாங்கி
இரைக்காய் அடைக்கலம் நாடிவந்து
திரும்பும் பாதை நினைவிருந்தும்
பயணம் சாத்தியப்படாத
நாங்களெல்லாம் சென்னைவாசிகள்
என்று வெளியில்
பெருமையாகச் சொல்லிக் கொள்வோம்
மேல்வீட்டுக்காரர் பரமக்குடி
கீழ்வீட்டுக்காரர் கடலூர்
காய்கறி கடைக்காரர் நாகர்கோவில்
மளிகைக் கடைக்காரர் திசையன் விளை
டீக்கடைக்காரர் பாலக்காடு
பழக்கடைக்காரர் செஞ்சி
தண்ணீர்க்கேன் போடுபவர் ஈரோடு
சைக்கிள் கடைக்காரர் அறந்தாங்கி
இரைக்காய் அடைக்கலம் நாடிவந்து
திரும்பும் பாதை நினைவிருந்தும்
பயணம் சாத்தியப்படாத
நாங்களெல்லாம் சென்னைவாசிகள்
என்று வெளியில்
பெருமையாகச் சொல்லிக் கொள்வோம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment