இறந்த காலத்திலிருந்து எப்போதாவது
நிகழுக்கு வலசை வருபவனென்று
நிந்தனைச் செய்கிறது
வாழ்வோடையின் வழுவலில்
நகர்ந்திடும் இளைய குரல்
வாழ் நாட்களை
உயிர்ப்புடன் வைத்திருக்கும் காலத்திலேயே
வாழ்ந்திறந்திட வேண்டும்
இல்லையேல்
முடிந்த காலத்தில் மூழ்கி
சிறகுகளைப் பிய்த்தெறிந்து
இரத்தம் உறையும் உடலை மறந்து
இறக்க நேரிடும் என்கிறது
பேசாமல் இருந்தே
கம்மிப்போன முதிய குரல்
இருள் அப்பிய குரல்களின் தனிமையில்
மூச்சடைக்க அழுத்தும் இரவுக்குள்
இன்பமான ஓர்
காதல் கனவைக் காண
முயல்கிறேன்
கார்த்திக் பிரகாசம்...
நிகழுக்கு வலசை வருபவனென்று
நிந்தனைச் செய்கிறது
வாழ்வோடையின் வழுவலில்
நகர்ந்திடும் இளைய குரல்
வாழ் நாட்களை
உயிர்ப்புடன் வைத்திருக்கும் காலத்திலேயே
வாழ்ந்திறந்திட வேண்டும்
இல்லையேல்
முடிந்த காலத்தில் மூழ்கி
சிறகுகளைப் பிய்த்தெறிந்து
இரத்தம் உறையும் உடலை மறந்து
இறக்க நேரிடும் என்கிறது
பேசாமல் இருந்தே
கம்மிப்போன முதிய குரல்
இருள் அப்பிய குரல்களின் தனிமையில்
மூச்சடைக்க அழுத்தும் இரவுக்குள்
இன்பமான ஓர்
காதல் கனவைக் காண
முயல்கிறேன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment