அந்த
ஓரிரு துளிகளில் தான்
எல்லாம் மாறுகின்றது
இலக்கியம் விரும்பி
இன்ஜினியரிங்கில் வீழ்வதும்
கனத்த மனதோடு
காதலனை / காதலியை உதறுவதும்
கனவுகளை மூட்டை கட்டியொழித்து
மனமே இல்லாமல்
மணப்பதும்
மாத சம்பள வேலை
மன்னனுக்கும் வாய்க்காதென்ற
அங்கலாய்ப்பில் மனம் கசக்க
தோய்வதும்
இல்லாத இன்பத்தைச்
சுகிக்காத நிம்மதியை
வலிந்து முகத்தில் திணித்துக் கொள்வதுமென
தனக்கான
பிரபஞ்சத்தின் அஸ்திவாரம்
ஒவ்வொரு முறையும்
இடம் பெயர்கின்றது
பெற்றவர்களின் அந்த
ஓரிரு கண்ணீர்த் துளிகளைக்
காணச் சகிக்காமல்
கார்த்திக் பிரகாசம்...
எல்லாம் மாறுகின்றது
இலக்கியம் விரும்பி
இன்ஜினியரிங்கில் வீழ்வதும்
கனத்த மனதோடு
காதலனை / காதலியை உதறுவதும்
கனவுகளை மூட்டை கட்டியொழித்து
மனமே இல்லாமல்
மணப்பதும்
மாத சம்பள வேலை
மன்னனுக்கும் வாய்க்காதென்ற
அங்கலாய்ப்பில் மனம் கசக்க
தோய்வதும்
இல்லாத இன்பத்தைச்
சுகிக்காத நிம்மதியை
வலிந்து முகத்தில் திணித்துக் கொள்வதுமென
தனக்கான
பிரபஞ்சத்தின் அஸ்திவாரம்
ஒவ்வொரு முறையும்
இடம் பெயர்கின்றது
பெற்றவர்களின் அந்த
ஓரிரு கண்ணீர்த் துளிகளைக்
காணச் சகிக்காமல்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment