எந்நேரமும் மலர் மணம் வீசிடும்
தெருவில் நாங்கள் குடியிருந்தோம்
சுகந்தமான தென்றலுடன்
எங்கள் வீட்டு வாசல் ஈரமாய்
நனைந்தே இருக்கும்
அறிமுகமில்லாத அந்நியர்களே
அதிகம் உலா வருவார்கள்
தாரை தப்பு முழங்கச்
சில்வண்டுகளாகிய
எங்களுக்கு ஒரே கும்மாளமாய் இருக்கும்
அடிக்கு ஏற்ப ஆட்டம் போடுவோம்
பெரியவர்கள் யாரும் வெளியே வரமாட்டார்கள்
கோலிக் குண்டு ஆட்டத்தில் ஓர் நாள்
நண்பனின் குண்டை உடைக்க
கோபத்தில் திட்டினான்
'போடா.. மயானத் தெரு மயிராண்டி'
அழுது கொண்டே ஓடினேன்
மலரின் மணம் சகிக்கவியலா
இழவு வீட்டின் நெடியாய்
நீண்டு படுத்திருந்தது
தெருவில்
சுடுகாட்டுக் கரையின்
ஒப்பாரி கூச்சலில்
கூரை முக்காட்டுக்குள்
முதுகின்றி முடங்கியிருந்தது
எங்கள் வீடு
கார்த்திக் பிரகாசம்...
தெருவில் நாங்கள் குடியிருந்தோம்
சுகந்தமான தென்றலுடன்
எங்கள் வீட்டு வாசல் ஈரமாய்
நனைந்தே இருக்கும்
அறிமுகமில்லாத அந்நியர்களே
அதிகம் உலா வருவார்கள்
தாரை தப்பு முழங்கச்
சில்வண்டுகளாகிய
எங்களுக்கு ஒரே கும்மாளமாய் இருக்கும்
அடிக்கு ஏற்ப ஆட்டம் போடுவோம்
பெரியவர்கள் யாரும் வெளியே வரமாட்டார்கள்
கோலிக் குண்டு ஆட்டத்தில் ஓர் நாள்
நண்பனின் குண்டை உடைக்க
கோபத்தில் திட்டினான்
'போடா.. மயானத் தெரு மயிராண்டி'
அழுது கொண்டே ஓடினேன்
மலரின் மணம் சகிக்கவியலா
இழவு வீட்டின் நெடியாய்
நீண்டு படுத்திருந்தது
தெருவில்
சுடுகாட்டுக் கரையின்
ஒப்பாரி கூச்சலில்
கூரை முக்காட்டுக்குள்
முதுகின்றி முடங்கியிருந்தது
எங்கள் வீடு
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment