நியூஸ்7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பழ.கருப்பையா அவர்களின் நேர்காணலை முகப்புத்தகத்தில் பலபேர் பரிந்துரைத்திருந்தனர். எனக்கும் பழ.கருப்பையாவின் பேச்சாற்றல் பிடிக்கும் என்பதனால் அந்த நேர்காணலைப் பார்த்தேன். பேச்சிலே தெளிவு.கலைஞர் தன்னைத் திருப்பி அழைத்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை மெலிதான புன்னகையின் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும் ஒவ்வொரு வார்த்தையிலும் அடங்கிப் போய் கிடக்கும் ஒரு சாமானியனின் கோபம் அனலாய்த் தகித்தது. அவற்றில் சில கருத்துக்கள் கீழே.
ஜெயலலிதாவை திராவிட சிசு என்று நான் கருதியது முற்றிலும் தவறானது.
ஓபிஎஸ் ஜெயிக்கிற குதிரையாக இருந்திருந்தால் அதில் சவாரி செய்ய பாஜக விரும்பாது. அவ்வாறு இல்லை என்பதனால்தான் அவரை வைத்து தற்காப்பு பயணம் செய்து கொண்டிருக்கிறது அதாவது அதிமுக'வை பிளவுபடுத்தி பாஜக வலுப்பெற முனைகிறது.
தாங்கள்தான் "மாற்று" என்று சொல்லிக் கொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று தீபாவளி பொங்கல் பண்டிகைகளின்போது மக்களுக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சாவிலே மர்மம் என்ற ஒரு சந்தேக காரணி மட்டும் புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்க போதுமா..! அவர்கள் போதும் என்று கருதுகிறார்கள். ஏனென்றால் அதைத் தான் அவர்களுடைய தலைவி அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். ஆக இவர்கள் மரணத்தில் மர்மம் என்று கத்துவது இவர்கள் தலைவி இவர்களுக்கு கற்றுக் கொடுத்தது
சாவிலே மர்மம் என்று தீபா தன் பெயரிலேயே கட்சித் தொடங்குகிறார். இது போதாதென்று தீபாவை முதல்வராக்குவதே தன் குறிக்கோள் என்று அவருடைய கணவர் ஒரு கட்சித் தொடங்குகிறார்.
ஜெயலலிதா திராவிடத்தை நீர்த்துப் போகச் செய்தார். இன்று அதிமுக நீர்த்து போயுள்ளது.
பொய்யர்கள் கூட தன்னிடம் உண்மை பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். திருடர்கள் கூட தங்கள் வீட்டில் திருட்டுப் போக கூடாது என்று விரும்புகின்றனர்.
நம்ம பொண்டாட்டியை கொஞ்சிட்டு திட்றதும், திட்டிட்டு கொஞ்சுற மாதிரியும்தான் தலைவர்களின் மீதான விமர்சனங்கள்.
ஆயிரம் குறைகளைக் கொண்டிருந்தாலும் காங்கிரஸ் ஒரு தன்னிகரில்லா கட்சி.. இன்று அது பலவீனமாக உள்ளது. அவ்வளவு தான்.
ஜெயலலலிதா இறந்த போதே அதிமுகவும் இறந்துவிட்டது. அது தற்போது மெரினாவில் புதைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு கட்சித் தேவைப்படுகிறது. மாலை நேரத்தில் நான்கு பேரை வைத்துக் கொண்டு ஊடங்கங்கள் நடத்தும் விவாதங்கள் நாய்ச் சண்டையை போலிருக்கிறது. ஏதோ ஒன்றை எடுத்து செல்வது ஊடகத்தின் வேலையல்ல. அறிவானவற்றை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மக்களின் சிந்தனைத் தூண்ட வேண்டும். அலுக்கானவற்றை அல்ல.
சிறுபான்மை மக்களை அரவணைப்பது போல திமுக பிரிவினையை முன்னிறுத்திருத்தவில்லை. மாறாக அது சிறுபான்மையினருக்கு நாங்கள் இருக்கிறோம் என்று தோள் கொடுக்கிறது. அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறது.
இன்னும் ஐம்பது வருடங்களுக்கு திராவிட இயக்கம் இருக்க வேண்டும். வெறுப்பு நிலைக்கொண்ட பாஜகவை தமிழகத்தில் வேரூன்ற விடக்கூடாது. அதைத் திராவிட இயக்கத்தால் மட்டுமே செய்ய முடியும். எப்படி ஒருகாலத்தில் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸை வீழ்த்தியதோ அதே போல பாஜகவையும் திராவிட இயக்கம் வீழ்த்தும்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment