Skip to main content
நண்பனின் குழந்தைக்கு மூன்று வயது கூட முழுதாக முடியவில்லை. ஆனால் அவன் இப்பொழுதே ஒரு பெருங்கவலையில் ஆழ்ந்துவிட்டான். அதற்கான காரணம் போன வாரம் ஊரில் கொஞ்சம் செல்வாக்கான பள்ளிக்கு, தன் குழந்தையின் பள்ளிச் சேர்க்கைக்காக விசாரிக்க சென்றிருக்கிறான். அவர்கள் அந்த மூன்று வயது குழந்தையிடம் நேர்காணலை நடத்தி முடித்துவிட்டு தங்கள் பள்ளியின் மிகக் குறைவான கட்டணத்தைப் பற்றி விவரித்திருக்கின்றனர். கட்டணத்தைக் கேட்டுவிட்டு நண்பன் ஆடிவிட்டான். ப்ரீ.கேஜிக்கு கட்டணம் முப்பத்தைந்தாயிரமாம். மேலும் சுற்று வட்டாரத்திலேயே அந்த பள்ளியின்தான் கட்டணம் மிக குறைவாம்.

போகிற போக்கை பார்த்தால் பட்டப் படிப்பிற்கல்ல பள்ளிப் படிப்பிற்கே தவிடு திங்க வேண்டும் போலிருக்கிறதே என்று புலம்ப ஆரம்பித்துவிட்டான். அவனின் மனைவிக்கு இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் இந்தக் கட்டண விவரத்தைக் கேட்டதில் இருந்து அந்த ஆசையை அடியோடு விட்டுவிட்டாளாம். பெற்ற இந்த "குழந்தையை மட்டுமாவது ஒழுங்காகப் படிக்க வைத்தால் போதும்" என்று சலித்துக் கொள்கிறாளாம்.

இன்னும் "ஒருவருடம் கழித்து குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டால் உனக்கு எந்த பாரமும் இருக்காது. உன் மனைவியின் ஆசைப்படி இன்னோரு குழந்தையையும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாமே" என்றேன்.

அரசுப் பள்ளியில் படித்தால் நல்ல பழக்கங்கள் வராது. சேர்க்கை சரியில்லாமல் போய்விடும்.வாழ்க்கைத் தடம் மாற வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள். ஆங்கில அறிவு அறவே இருக்காது.வேலைக் கிடைப்பது கடினம். வேலைக் கிடைக்காவிட்டால் சரியான வரன் அமையாது. இது எல்லாவற்றிக்கும் மேலாக அரசுப் பள்ளியில் படிக்க வைத்தால் நம் அந்தஸ்த்து என்னாவது என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போய் கடைசியில் விடாப்பிடியாக மறுத்துவிட்டான்.

கடன் வாங்கி சொத்தை அழித்து நிம்மதியை விற்றாவது தனியார் பள்ளியில் படிக்க வைப்பனே தவிர அரசுப் பள்ளியில் சேர்க்க மாட்டேன் என்று உறுதியாக நிற்கிறான்.

இன்றைய தலைமுறை சமூக அந்தஸ்தை மூச்சுக் காற்றாக சுவாசிக்கும் கலாச்சாரத்தில் சீராக சுவாசிப்பதைப் போல் வெளியே காட்டிக் கொண்டு உண்மையில் சுவாசிக்க முடியாமல் உள்ளே திணறிக் கொண்டிருக்கிறது.

போலி அந்தஸ்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் சொந்தங்களிடமும் பெருமைக்காட்டி கொள்வதற்காகவும் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளின் வாசல்களில் விடிவதற்கு முன்னே போய் நிற்கும் நிலை மாறும் வரை இது போன்ற பகல் கொள்ளைகளை தடுக்கவே முடியாது.

போலி அந்தஸ்தும், நுகர்வு கலாச்சாரமும் இன்றைய தலைமுறையின் பொருளாதாரத்தைத் திக்கற்ற வழியில் செலுத்திக் கொண்டிருக்கிறது.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...