அடித்தட்டு மக்களின் மனதில் அவ்வளவு எளிதில் யாராலும் நுழைந்துவிட முடியாது. அப்படியே நுழைந்துவிட்டாலும் அன்றாட காட்சிகளின் மனதில் நீடித்து நிற்பதொன்றும் எளிதான காரியமல்ல.அந்தக் குடுப்பனை அனைவருக்கும் கிட்டாது.
கையில் ரஜினி காந்தின் படத்தை பச்சைக் குத்தியிருந்தார்.குளித்து முடித்தபின் மெதுவாக பேச்சு கொடுத்த போது, "எங்க இருந்து வரீங்க" என்றார்.
சென்னை" என்றோம்.
சென்னையில "பாட்ஷா படம்" ரிலீஸ் ஆயிருக்கா. படம் எப்பிடி போகுது. "எனக்கு ரஜினி'னா உசுரு. சாவறதுக்குள்ள ஒரு தடவையாவது அந்த மனுஷன பாத்துடனும். அதான் என்னோட ஆச" என்று இடைவெளியே இல்லாமல் வார்த்தைகளை உணர்ச்சிகளோடு கொட்டிவிட்டு கிளம்பினார்.
மூப்பானாலும், காலங்கள் கண்காணா தூரத்திற்கு சென்றாலும் அடித்தட்டு மக்களை இழுத்து வைத்திருக்கும் காந்த சக்திக்கு இன்னும் அந்த மனிதனிடமிருந்து விலகிக் கொள்ள மனம் ஒப்பவில்லை போலும்.
கார்த்திக் பிரகாசம்...
குற்றால ஐந்தருவியில் ஒரு ஓரமாக ஒழுகிக் கொண்டிருந்த நீரோடையில் உடலை நனைத்துக் கொண்டிருந்த போது மிதிவண்டியை தள்ளிக் கொண்டு "சுண்டல் விற்பவர்" அங்கே குழுமியிருந்த சிறு சிறு குழுக்களிடையே அலைந்து கொண்டிருந்தார்.
கையில் ரஜினி காந்தின் படத்தை பச்சைக் குத்தியிருந்தார்.குளித்து முடித்தபின் மெதுவாக பேச்சு கொடுத்த போது, "எங்க இருந்து வரீங்க" என்றார்.
சென்னை" என்றோம்.
சென்னையில "பாட்ஷா படம்" ரிலீஸ் ஆயிருக்கா. படம் எப்பிடி போகுது. "எனக்கு ரஜினி'னா உசுரு. சாவறதுக்குள்ள ஒரு தடவையாவது அந்த மனுஷன பாத்துடனும். அதான் என்னோட ஆச" என்று இடைவெளியே இல்லாமல் வார்த்தைகளை உணர்ச்சிகளோடு கொட்டிவிட்டு கிளம்பினார்.
மூப்பானாலும், காலங்கள் கண்காணா தூரத்திற்கு சென்றாலும் அடித்தட்டு மக்களை இழுத்து வைத்திருக்கும் காந்த சக்திக்கு இன்னும் அந்த மனிதனிடமிருந்து விலகிக் கொள்ள மனம் ஒப்பவில்லை போலும்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment