காலையில் கண் விழித்தது முதல் இரவு கண்ணுறங்கும் வரை முழுக்க முழுக்க நண்பர்களால் சூழப்பட்டிருக்கும் இந்த வெளியூர் வாழ்க்கையில் மனதிற்கு நெருக்கமான நண்பர்கள் அமைவது வரம்.
அலுவலகத்தில் ஒரு நண்பர். சக சொந்த ஊர்க்காரர். அவரும் நானும் வெவ்வேறு டீம் என்பதால் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பமோ, அதிகம் பேசக்கூடிய வாய்ப்போ இதுவரையில் அமைந்தது இல்லை. ஆனால் சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் இருவரும் பரஸ்பரம் கேட்டுக் கொள்ளும் கேள்வி " இந்த வாரம் ஊருக்கு போறிங்களா.?" என்பது மட்டும் தான். அதைத் தவிர நாங்கள் அதிகம் பேசியதில்லை.
ஆனால் அந்த ஒரு கேள்வியில் பலநாள் பழகிய சிநேகிதம் மனதைத் தொட்டு பரவசம் மூட்டும். யார் யாரோ அவ்வப்போது இந்தக் கேள்வியைக் கேட்டாலும் சக சொந்த ஊர்க்கார நண்பர் என்பதனாலேயே அவர் கேட்கும் போது கூடுதலான கிளர்ச்சியொன்று உணர்வுகளுக்குள் ரீங்காரம் செய்யும். அதற்காகவே பார்க்கும் போதெல்லாம் இருவரும் அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். கேள்விக்குண்டான பதிலுடன் சிறு புன்னகையையிட்டு கண்களில் கைக்குலுக்கி அந்தத் தருணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
இந்த வாரம் ஊருக்குச் செல்கிறேன். நாளையோ நாளை மறுநாளோ ஒருவேளை பார்க்க நேர்ந்தால் அவர் கேட்கப் போகும் "இந்த வாரம் ஊருக்கு போறிங்களா" என்ற தருணத்தில் திளைப்பதற்காக இப்பொழுதில் இருந்தே காத்திருக்கத் தொடங்கிவிட்டேன்.
நண்பர்கள் பலவிதம்...!!! ஒவ்வொருவரும் ஒரு அனுபவம்...!!!
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment