"சர்வதேச மகளிர் தினம்" என்பது பெண்களின் பெருமைகளைப் போற்றுவதற்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. பெண்களின் போராட்டக் குணங்களையும், விடாமுயற்சிகளையும், ஆணினத்திற்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல இந்த பெண் இனம் என்று உலகத்திற்கு பறைசாற்றுவதற்காகவே உண்டாக்கப்பட்டது.
"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா" என்று பெண் பிறப்பின் பெருமையை போற்றி பாடினார் "கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை". ஆனால் இன்று சமூகத்தில் "ஒரு பெண்" வாழ்வதற்கு எத்தனை பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதிகாரத்தில் இருந்தாலும் சரி, அடித்தட்டில் இருந்தாலும் சரி "பெண்" என்று வரும் போது மட்டும் இந்த சமூகம் ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைந்து விடுகிறது. அது விஷ்ணு பிரியாவிற்கும் வினு பிரியாவிற்கும் ஒரே முடிவைத் தான் அளித்திருக்கிறது.
இயற்கையில் பெண்களை விட ஆண்களைப் பலமாக படைத்தது பெண்களை பாதுக்காகத்தானே தவிர பலவந்தப்படுத்த அல்ல. பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வு அளிக்கும் ஆண் சமுதாயம் அமைந்திட வேண்டும். கண்டிப்பாக அமைத்திட வேண்டும் ஆனால் அச்சமூகத்தை கட்டமைக்கும் முக்கிய பங்கும் அதே பெண்ணின் கைகளிலேயேதான் அவளுக்கே தெரியாமல் அடைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாம் பெண்களை புனித பிம்பமாக்க வேண்டிய அவசியமில்லை. நாம் அவர்களைத் தூக்கி வைத்து கொண்டாடவும் வேண்டாம்; ஏறி மிதித்து நசுக்கவும் வேண்டாம். இவ்வுலகில் நம்மை போல மனித பிறப்பெடுத்த சக உயிராக மதிப்பளித்தாலே போதும். பெண் சமூகம் பெண்ணாகப் பிறப்பெடுத்தற்காகப் பெருமைப்படும். ஆண் சமூகத்தைக் கௌரவப்படுத்தும்.
பெண் உரிமைக்காக, பாதுகாப்பிற்காக இனியும் பெண்கள் மட்டும் போராடுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. பாதிக்கப்படும் பெண்களுக்காக ஆண்கள் குரல் கொடுக்க வேண்டும். சமூக விரோதிகளால் பெண்களின் மீது ஏவப்படும் பாலியல் வன்முறைகளையும், ஒடுக்குமுறைகளையும் களைய ஆண்கள் உறுதிக் கொள்ள வேண்டும். ஒரு பெண் பாதிக்கப்படும் போது ஒலிக்கும் முதல் குரல் ஒரு ஆணுடையதாக உருமாறும் போது இச்சமூகம் பெண் பாதுகாப்பில் தன்னிறைவு பெறும். பெண்களுக்கு மதிப்பளிக்கும் மரியாதையளிக்கும் சமூகம் தன்னிச்சையாக கட்டமைக்கப்படும்.
ஜோதி சிங்(நிர்பயா), ஸ்வாதி, லட்சுமி, ரசிலா, விஷ்ணு பிரியா, நந்தினி, வினு பிரியா, கௌசல்யா, திவ்யா மற்றும் இன்னும் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அடுத்த ஜென்மத்திலாவுது ஆசைப்பட்ட வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும்.
தோழிகளுக்கும், சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும், கருவில் உயிர் பெற்றிருக்கும் ஒவ்வொரு பெண் சிசுவிற்கும் மகளிர் தின வாழ்த்துகள்..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment