அப்பா அம்மா இருவரும் உண்ணும் உண்ணாமல் உயிரைப் பசிக்கு தீனியாயிட்டு மகனைப் படிக்க வைத்தனர். பெற்றோரின் கஷ்டத்தை நன்கு அறிந்து வளர்ந்த பையன். முடிந்த எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பான். மதிப்பெண்கள் அவன் அறிவிடம் மண்டியிட்டு காத்துக் கிடந்தன. ஒருநாள் அவன் பள்ளியில் கட்டுரைப் போட்டி அறிவித்தனர். போட்டியின் தலைப்பாக "அறிவுப்பசி" என்று அறிவிக்கப்பட்டது. அவன் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தான். போட்டி நாள் வந்தது. தன் ஆசையைப் பற்றி நிதானமாக வார்த்தைகள் சிதறாமல் உணர்வுகள் பிறழாமல் கட்டுரையொன்றை வடித்தான். எத்தனையோ மாணவர்கள் பங்கேற்றப் போட்டியில் அனைத்து ஆசிரியர்களும் ஒருதலைபட்சமாக அவனுடைய கட்டுரையைத் தெரிவு செய்தனர். பரிசு வழங்கும் போது மேடையில் அவன் எழுதிய கட்டுரையை ஆசிரியர் ஒருவர் வாசித்தார். "பசியை அத்தியாவசியமாகவும் ருசியை ஆடம்பரமாகவும் கருதும் குடும்பம் என்னுடையது. மூன்று வேளை முழுதாய் சாப்பிடுவது என்பதெல்லாம் எங்களுக்கு கனவில் மட்டுமே சாத்தியம். கனவில்கூட மூன்று வேளை உணவு கிடைக்குமா என்பது பற்றியதுதானே தவிர அதன் ருசியைப் பற்றி இருக்காது. ஏனென்றால் தினசரி சோற...