Skip to main content

அறிவுப்பசி

அப்பா அம்மா இருவரும் உண்ணும் உண்ணாமல் உயிரைப் பசிக்கு தீனியாயிட்டு மகனைப் படிக்க வைத்தனர்.

பெற்றோரின் கஷ்டத்தை நன்கு அறிந்து வளர்ந்த பையன். முடிந்த எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பான். மதிப்பெண்கள் அவன் அறிவிடம் மண்டியிட்டு காத்துக் கிடந்தன.

ஒருநாள் அவன் பள்ளியில் கட்டுரைப் போட்டி அறிவித்தனர். போட்டியின் தலைப்பாக "அறிவுப்பசி" என்று அறிவிக்கப்பட்டது. அவன் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தான்.

போட்டி நாள் வந்தது. தன் ஆசையைப் பற்றி நிதானமாக வார்த்தைகள் சிதறாமல் உணர்வுகள் பிறழாமல் கட்டுரையொன்றை வடித்தான்.

எத்தனையோ மாணவர்கள் பங்கேற்றப் போட்டியில் அனைத்து ஆசிரியர்களும் ஒருதலைபட்சமாக அவனுடைய கட்டுரையைத் தெரிவு செய்தனர். பரிசு வழங்கும் போது மேடையில் அவன் எழுதிய கட்டுரையை ஆசிரியர் ஒருவர் வாசித்தார்.

"பசியை அத்தியாவசியமாகவும் ருசியை ஆடம்பரமாகவும் கருதும் குடும்பம் என்னுடையது. மூன்று வேளை முழுதாய் சாப்பிடுவது என்பதெல்லாம் எங்களுக்கு கனவில் மட்டுமே சாத்தியம். கனவில்கூட மூன்று வேளை உணவு கிடைக்குமா என்பது பற்றியதுதானே தவிர அதன் ருசியைப் பற்றி இருக்காது. ஏனென்றால் தினசரி சோறு கிடைப்பதே பெரிய விடயம். அதில் எங்கே ருசியைப் பார்ப்பது. ஒவ்வொரு நாளின் இரவும் இன்றைய நாள் சாப்பிடவில்லையே என்ற கவலையை விட நாளையாவது மூன்றுவேளை சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்துடனே முடியும்.

நாங்கள் பட்டினியில் பரிதவிக்கும் நாட்களில் எத்தனையோ திருமண வீடுகளில் மீந்துப் போன உணவைக் குப்பையில் கொட்டுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். பார்த்த நிமிடத்தில் கண்களில் காட்டு வெள்ளம் போல கண்ணீர் பெருகும். ஏனென்றால் குப்பைத் தொட்டியில் இருக்கும் நாய்களுக்கு கூட நல்ல உணவு கிடைக்கிறது நமக்கு கிடைக்கவில்லையே என்ற துக்கம் தொண்டையை அடைக்கும்.

என் பெற்றோர்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் "மகனுக்கு வயிறார உணவிடக்கூட வக்கில்லாமல் போனதே" என்ற குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகுவார்கள். நான் அவர்கள் முகத்தை எதிர்க் கொள்ள முடியாமல் தவிப்பேன்.

ஆனால் மூன்றுவேளை உணவில்லாதபோதும் அவர்கள் என் படிப்பை நிறுத்தச் சொன்னதில்லை. அவர்களுடனே கூலிக்கு வர சொல்லவில்லை. ஒருவேளை நான் போனால் நாங்கள் மூன்றுவேளை உணவுச் சாப்பிடலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.

பெற்றோர்கள் என் வயிற்றுப் பசியை முழுமையாகத் தீர்க்கவில்லையே தவிர, அறிவுப் பசியை நிரம்ப தந்திருக்கின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது வயிற்றுப் பசியை அறிவுப் பசியால் மட்டுமே நிரப்ப முடியும்.

என் வயிற்றுப்பசி ஒருநாள் வறண்டு போகும். ஆனால் என் அறிவுப் பசி ஒருநாளும் அழிந்து போகாது. ஏனென்றால் என் அறிவுப் பசியைக் கொண்டு தான் வருங்கால சமூகத்தில் எங்களைப் போன்ற குடும்பங்களின் வயிற்றுப் பசியைத் தீர்க்கப் போகிறேன்" என்று எழுதி இருந்தான்.

ஆசிரியர்களின் கண்ணீர்த் துளிகளில் மாணவர்களின் கரவோசை முடிய சில நிமிடங்கள் ஆனது.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...