அவனைச் சந்திக்கும் போதெல்லாம்
பிய்த்துக் கொண்டு கிளம்பும்
கண்ணீர்த் துளிகளுக்கு
கணக்கு வழக்கில்லை
கட்டிப்பிடிக்கத் துடிக்கும் கரங்களும் அதைக்
கட்டுப்படுத்திக் கொல்லும் கண்ணியமும்
அவளுக்கொன்றும் கவலையில்லை
அஞ்சனத்தையே கண்ணீருக்கு
தடுப்பணை ஆக்குவதும்
அவனின் விரல் பசிக்கு
வெட்கத்தை விருந்தளிப்பதும்
அவள் எப்போதும் விரும்பி ஏற்கும் இன்னல்கள்
இதோ
இந்த
இரவு நகர மறுக்கின்றது
இதயம் இடைவெளியின்றி
இசைக்கின்றது
ஏசி அறையின் வெப்பம்
வேர்வையை விதைக்கின்றது
நகங்களின் உயரம் எச்சிலில்
கரைகின்றன
விரல்களின் சடக்கைச் சத்தம்
அறையின் செவிகளில்
செத்து மடிகின்றன
கால்கள் நிலத்தை
முரட்டுத் தனமாக முத்தமிடுகின்றன
முந்திக் கொண்டு வரும் உறக்கம்
இன்று பரதேசம் போய்விட்டது
அவள்
நாளை
அவனைச் சந்திக்கப் போகிறாள்...
பிய்த்துக் கொண்டு கிளம்பும்
கண்ணீர்த் துளிகளுக்கு
கணக்கு வழக்கில்லை
கட்டிப்பிடிக்கத் துடிக்கும் கரங்களும் அதைக்
கட்டுப்படுத்திக் கொல்லும் கண்ணியமும்
அவளுக்கொன்றும் கவலையில்லை
அஞ்சனத்தையே கண்ணீருக்கு
தடுப்பணை ஆக்குவதும்
அவனின் விரல் பசிக்கு
வெட்கத்தை விருந்தளிப்பதும்
அவள் எப்போதும் விரும்பி ஏற்கும் இன்னல்கள்
இதோ
இந்த
இரவு நகர மறுக்கின்றது
இதயம் இடைவெளியின்றி
இசைக்கின்றது
ஏசி அறையின் வெப்பம்
வேர்வையை விதைக்கின்றது
நகங்களின் உயரம் எச்சிலில்
கரைகின்றன
விரல்களின் சடக்கைச் சத்தம்
அறையின் செவிகளில்
செத்து மடிகின்றன
கால்கள் நிலத்தை
முரட்டுத் தனமாக முத்தமிடுகின்றன
முந்திக் கொண்டு வரும் உறக்கம்
இன்று பரதேசம் போய்விட்டது
அவள்
நாளை
அவனைச் சந்திக்கப் போகிறாள்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment