நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனையோ முறை அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளான் ராஜா. ஆனால் ஒருபோதும் பிரியா அதற்கு பதில் அளித்ததே இல்லை. புரிந்தாலும் புரியாதது போல் அப்போதைக்கு சமாளித்து விட்டு வேறு பேச்சுக்கு சென்று விடுவாள்.
எப்படியோ அவள் தன்னை மறுக்கவும் இல்லை வெறுக்கவும் இல்லை என்று மனதை தேற்றிக் கொள்வான் ராஜா. என்றோ ஒரு நாள் தன்னை ஏற்றுக் கொள்வாள் தன் காதலைப் புரிந்து கொள்வாள் என்று ராஜாவும் காத்திருந்தான்.
ராஜா கறுப்புச் சட்டை விரும்பி அணிபவன். பார்க்கும் போதெல்லாம் கறுப்புச் சட்டையையே அணிவதற்காகப் பிரியா அவனைத் திட்டிக் கொண்டே இருப்பாள். ஆனால் அவன் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் இருந்து விடுவான்.
அன்று ராஜாவின் பிறந்தநாள். இருவரும் சந்திப்பதற்காக ஏற்கனவே பேசி இருந்தனர்.
பிறந்தநாள் அன்றாவது கறுப்புச் சட்டை அணிய வேண்டாம் என்று பிரியா சொல்லி இருந்தாள். ஆனால் ராஜா அதைப் பொருட்படுத்தவில்லை.
வழக்கம்போல கறுப்புச் சட்டையை மாட்டிக் கொண்டு இன்று எப்படியாவது அவளது முடிவைக் கேட்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினான்
சிரித்த முகமாக நின்றுக் கொண்டிருந்தப் பிரியா, இவன் கறுப்புச் சட்டை அணிந்து வருவதைப் பார்த்து முகம் சுளித்தாள். இத்தனை முறை சொல்லியும் அவன் கறுப்பு அணிந்து வருவதைப் பார்த்து கோபம் கொண்டாள்.
இந்தக் கோபத்தை சிறிதும் எதிர்பாராத ராஜா, அமைதியாக அவளைப் பார்த்தவாறே நின்றுக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கு இருவரின் கண்கள் மட்டுமே சந்தித்துக் கொண்டன. ஆனால் பேசிக் கொள்ளவில்லை. அந்த அமைதியை மூட்டைக் கட்ட நினைத்த ராஜா, "இன்னும் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லவில்லையே" என்றான்..
கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த பிரியா, நீ கறுப்பு மட்டும்தான் அணிவாய் என்றால், துணித் துவைக்க தனியாக ஆள் வைத்துக் கொள்ளலாம். கல்யாணத்திற்குப் பிறகு உன் கறுப்புச் சட்டைகளை என்னால் துவைத்துக் கொண்டிருக்க முடியாது என்றுச் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்து விட்டாள்.
அதிர்ச்சியில் உறைந்துப் போயிருந்த ராஜா, இயல்பு நிலைக்கு வர சில கனங்கள் ஆயின.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment