பி.ஏ வரலாறு படித்து விட்டு குடும்ப கஷ்டத்திற்காக டீக்கடையில் வேலை செய்யும் இளைஞன். தகவல் தொழில் நுட்ப பூங்காக்களுக்கு வெளியில் நின்றுக் கொண்டு கடந்து செல்பவர்களிடம் மட்டுமல்ல திரும்பிக்கூட பார்க்காதவர்களிடமெல்லாம் ஏதாவதொரு கடன் அட்டை அல்லது வங்கிக் கடனுக்கான அட்டையை நீட்டிக் கொண்டு நிற்பவன்.
மூன்றுவேளை சாப்பாட்டிற்காக பல அடி உயரத்தில் தொங்கி உயிரைப் பணயம் வைத்து கண்ணாடியைத் துடைக்கும் சாமானியன். புல் தரையை இயந்திரம் மூலம் சீர்ப்படுத்திக் குப்பையை கையில் அள்ளிக்கொண்டு செல்லும் பல அக்காக்கள். துடைக்க துடைக்க நடந்து கொண்டே இருக்கும் தரையை மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் பெரியவர். தினமும் இதுபோல இன்னும் பலரைத் தாண்டி தான் வாழ்க்கையின் அன்றாட நாளை நிறைவு செய்ய முடிகிறது.
பலருக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. ஆனால் அதற்காக அவர்கள் வாழ்க்கையை வெறுமனே விட்டு விடுவதில்லை.
இவர்களையெல்லாம் கடக்கும் போது தான், நான் எந்த அளவுக்கு சொகுசான பகட்டு வாழ்க்கை வாழ்கிறேன் என புரிகிறது.
கார்த்திக் பிரகாசம்...

பிடித்த வேலை பிடிக்காத வேலை எளிதான வேலை கடினமான வேலை என்பதையெல்லாம் தாண்டி "பசி" என்ற ஒற்றை அரக்கனிடமிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள மட்டுமே அன்றாட நாட்களை இத்தகைய வேலைகளின் மூலம் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களையெல்லாம் கடக்கும் போது தான், நான் எந்த அளவுக்கு சொகுசான பகட்டு வாழ்க்கை வாழ்கிறேன் என புரிகிறது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment