நீ
மறுத்துவிட்டதால்
மறந்துவிடவில்லை
வேண்டாமென்றதால்
வெறுத்துவிடவில்லை
தூரம் சென்றுவிட்டதால்
துறந்துவிடவில்லை
தொந்தரவு முடிந்ததென்று
தொலைத்துவிடவுமில்லை
நீ
விருப்பமில்லையென்றதனால்
விலகி நிற்கின்றேன்
அவ்வளவுதான்
நான் காதலிப்பது வேண்டுமானால்
எனக்காக இருக்கலாம்
ஆனால் இன்று விலகி நிற்பது
உனக்காக என்றும்
நான் இருக்கின்றேன் என
புரிய வைப்பதற்காகவே
ஒரே ஒரு சோகம்
நான் கொண்ட காதலுக்காக
நாம் கொண்ட நட்பை
இழக்க வேண்டியதாயிற்று
பரவாயில்லை
காதலில்
இழப்புகள்தான்
இருப்பின் அருமையை
இருத்தும்
மறுப்புகள்தான்
காதலின்
மாண்பைக் காக்கும்
வெறுப்புகள்தான்
காதலின்
புரிதலைப் பூர்த்திச் செய்யும்
தூரங்கள்தான்
காதலின்
தொலைவைக் குறைக்கும்
தொந்தரவுகள்தான்
காதலில்
துணிச்சலைக் கொடுக்கும்
பிரிவுகள்தான்
சில சமயங்களில்
பிரியத்தை உணர்த்தும்
உன்னிடமிருந்து விலகி
நிற்கின்றேனே தவிர
உன்னை விலக்கி அல்ல...
கார்த்திக் பிரகாசம்...
மறுத்துவிட்டதால்
மறந்துவிடவில்லை
வேண்டாமென்றதால்
வெறுத்துவிடவில்லை
தூரம் சென்றுவிட்டதால்
துறந்துவிடவில்லை
தொந்தரவு முடிந்ததென்று
தொலைத்துவிடவுமில்லை
நீ
விருப்பமில்லையென்றதனால்
விலகி நிற்கின்றேன்
அவ்வளவுதான்
நான் காதலிப்பது வேண்டுமானால்
எனக்காக இருக்கலாம்
ஆனால் இன்று விலகி நிற்பது
உனக்காக என்றும்
நான் இருக்கின்றேன் என
புரிய வைப்பதற்காகவே
ஒரே ஒரு சோகம்
நான் கொண்ட காதலுக்காக
நாம் கொண்ட நட்பை
இழக்க வேண்டியதாயிற்று
பரவாயில்லை
காதலில்
இழப்புகள்தான்
இருப்பின் அருமையை
இருத்தும்
மறுப்புகள்தான்
காதலின்
மாண்பைக் காக்கும்
வெறுப்புகள்தான்
காதலின்
புரிதலைப் பூர்த்திச் செய்யும்
தூரங்கள்தான்
காதலின்
தொலைவைக் குறைக்கும்
தொந்தரவுகள்தான்
காதலில்
துணிச்சலைக் கொடுக்கும்
பிரிவுகள்தான்
சில சமயங்களில்
பிரியத்தை உணர்த்தும்
உன்னிடமிருந்து விலகி
நிற்கின்றேனே தவிர
உன்னை விலக்கி அல்ல...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment