இந்தியாவில் 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம் பங்களாதேஷத்தில் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் தொகுப்பு தான் லஜ்ஜா.
தஸ்லிமா நஸ்ரினால் எழுதப்பட்டு, கே.ஜி.ஜவர்லால் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
உண்மை அல்லது உண்மைக்கு அருகாமையான விடயங்களை கதையின் பாத்திரங்களும் மூலம் பதிமூன்று நாட்களில் முடியும் நாவலாக அமைத்திருக்கிறார் தஸ்லீமா நஸ்ரின்.
இந்துக்கள் என்ற போர்வையில் ஒரு சிலரால் அல்லது சில அமைப்பால் செய்யப்பட்ட ஒரு செயல், இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள ஒரு தேசத்தில் எந்த அளவுக்கு கொடுமைகளை, மதம் என்ற பெயரில் வக்கிரங்களை அவர்களுக்கு இழைத்துள்ளது என்பதை ஆழமாக விவரிக்கின்றது.
மதச்சார்பற்ற நாடு என்று வெளியில் மார்த்தட்டிக் கொண்ட தேசம் (பங்களாதேஷ்), அரசியல் கட்சிகளால் எப்படி இஸ்லாமிய தேசமாக உருமாற்றப்பட்டது அதனால் மற்ற மதத்தினர்(குறிப்பாக இந்துக்கள்) மேற்கொண்ட இடப்பெயர்வு ஆகியவற்றை புள்ளி விவரங்களுடன் பதிவு செய்கின்றது.
ஒருங்கிணைந்த வங்காளிகளாக பங்களாதேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களை, சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லீம் இந்து என்று மதமென்ற மண்ணுக்குள் புதைத்து விட்ட சுயலாப அரசியலை தோலுரித்து காட்டுகின்றது.
ஒரு நாட்டில் உள்ள இந்துக்கள் மசூதியை இடித்துவிட்டதால், தங்கள் நாட்டிலுள்ள இந்துக்களின் வீட்டை சூறையாடுவதும், சொத்தை அபகரிப்பதும், பெண்களை கற்பழிப்பதும் என நிகழும் வன்முறையாட்டங்களால் மதச்சார்பில்லாத ஒருவன் மதவெறியனாகத் துணிவதை சுரஞ்சன் பாத்திரம் ஆழமாக பதிவுச் செய்துள்ளது.
இளம் வயதில் வங்காளியாக பங்களாதேசத்தின் சுதந்திரத்திற்குப் போராடிய, மதவேறுபாடில்லாமல் எச்சூழ்நிலையிலும் தாய்நாட்டை வெளியேற நினைக்காத, தாய்நாட்டை உண்மையாக நேசிக்கும் ஒரு இந்து, தன் மகளை இழந்தப் பின் நாட்டை விட்டு வெளியேறும் முடிவுடன் நாவல் முடிகிறது.
நாவலை முடிக்கும் தருணம் மதச்சார்பின்மை, மதத்தின் பெயரால் நடக்கும் அரசியல், ஓட்டிற்காக செயற்கையாக உருவாக்கப்படும் மதக் கலவரங்கள் பற்றிய புரிதலுடன் கூடிய தெளிவு பிறக்கும்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment