மூர் மார்க்கெட்டின் முகப்பிலேயே காற்று வெளியில் ஆக்கிரமிக்காத அடக்கமான இடத்தில் ஒருபுறம் தமிழ்ப் புத்தகங்களாலும், மறுபுறம் ஆங்கிலப் புத்தகங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தலை நிமிர்ந்து நிற்கிறது "கான் புக்ஸ் கடை". வாஜித் அண்ணன் சிரித்த முகத்துடன் வாசலில் நின்று வரவேற்கிறார். கடையின் முக்கால்வாசி பகுதியை ஆங்கிலப் புத்தகங்களே ஆக்கிரமித்திருந்தாலும் ஓரளவுக்குக் கணிசமான தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்கின்றன. கேட்கும் தமிழ்ப் புத்தகம் தற்சமயம் இல்லாவிட்டாலும் கைக்குக் கிடைத்தவுடன் கண்டிப்பாக அழைப்பதாக உறுதியளிக்கிறார். பெரிய பெரிய கடைகளே புத்தகத்தில் என்ன லாபம் கிடைக்கிறதென்று கழிவுவிலைக் கொடுக்காத நிலையில், எல்லா தமிழ்ப் புத்தகங்களையும் பத்து சதவீதக் கழிவு விலையில் கொடுக்கிறார் வாஜித் அண்ணன்.
தற்செயலாக "திராவிட இயக்க வரலாறு" இரண்டு பாகங்களையும் வாங்கிக் கொண்டு அண்ணா அறிவாலயத்தைக் கடக்கும் போது பேனரில் கலைஞர் சிரித்துக் கொண்டிருந்தார். புத்தகங்கள் கொஞ்சம் கனமாயின.
ஏனோ அந்த மனிதனைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. அவர் பேசிய விதம். கேட்ட புத்தகம் இல்லையென்றாலும் பக்கத்தில் இரண்டு மூன்று கடைகளில் விசாரிக்க அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை. வேறு சில நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய முறை.கடை மூடும் நேரத்தில் சென்ற போதிலும் கனிவான பேச்சு என்று மனமெங்கும் நிறைந்துவிட்டார்.
தற்செயலாக "திராவிட இயக்க வரலாறு" இரண்டு பாகங்களையும் வாங்கிக் கொண்டு அண்ணா அறிவாலயத்தைக் கடக்கும் போது பேனரில் கலைஞர் சிரித்துக் கொண்டிருந்தார். புத்தகங்கள் கொஞ்சம் கனமாயின.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment