Skip to main content

Posts

Showing posts from December, 2017
பறவையே எங்கு இருக்கிறாய்...!!! வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு இசை தான் இளைப்பாறல். அது பிறப்பாயினும், இறப்பாயினும், கொண்டாட்டமாயினும், துக்கமாயினும் எதுவாயினு...
பேரில்லாமல் ஓர் உறவு இருக்கலாமா..! ஆதலால் அந்த உறவுக்கு ஓர் பெயரிட வேண்டும்..! ஆனால் ஏற்கனவே இருக்கும் உறவைக் குறிக்கும் எந்தப் பெயராகவும் அது இருக்கக் கூடாது..! பேரு...

கிறிஸ்துமஸ்

சிறுவயதில் நானும் தங்கையும் அப்பாவிடம் "கிறிஸ்துமஸ் ஸ்டார்' வாங்கித் தர சொல்லி அடம்பிடிப்போம். மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிவந்து பல்புக்கு மின்னிணைப்பு கொடுத்து வீட்டின்முன் தொங்க விடுவார் அப்பா. டிசம்பர் மாதம் தொடங்கும் போதே வீட்டின்முன் ஸ்டார் வெளிச்சமாய்த் தொங்கும்.வீடே நட்சத்திர வெளிச்சத்தில் அழகாய் இருக்கும். அம்மா கிறிஸ்துமஸ் அன்று சர்ச்க்கு கூட்டிப் போவார். "இது கிறித்துவர்கள் கொண்டாடும் பண்டிகை நமக்கெதற்கு.." என்று அவர்கள் ஒருபோதும் சொன்னதில்லை. அக்கம்பக்கத்துத் தெரு நண்பர்களெல்லாம் இணைந்து தெருவின் மையப்பகுதியில் உள்ள வீட்டின் முன் குடில் அமைத்து சீரியல் பல்புகளைக் கொண்டு அலங்கரிப்போம். குடிலின் அடித்தளப் பகுதி முழுதும் வைக்கோல் பரப்பி அதன்மீது மாதா சிலை, இயேசு கிறிஸ்துவின் குழந்தைச் சிலை, வண்ணமயமான மணிகள் மற்றும் நட்சத்திரங்கள் என்று குடிலே கோலாகலமாக இருக்கும். தெருவின் மொத்த சிறுவர் பட்டாளமும் அந்த குடிலின்முன் இருக்கும். நண்பர்களுக்குள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் தரிக்கக் கடும் போட்டி நிலவும். கடைசியில் கிறிஸ்துமஸ் தாத்தா உடை வைத்திருப்பவனுக்கோ அல்ல...
உன் இமைகளைப் பூட்டு..! இரவு ஒரு ஆறுதல்..! இரவு ஒரு இளைப்பாறல்..! இமைகளைப் பிணைத்து ஆறுதல் கொள்..! இதயத்தைத் திறந்து இளைப்பாறு..! பயத்தால் இரவைத் தண்டிக்காதே..! இரவை அனுபவி..! இருளை அள்ளிப் பூசிக்கொள்..! கட்டிலில் படுத்து கனவுகளைக் கட்டியிழு..! மனம் எங்கோ செல்லட்டும் தடுக்காதே..! பின்தொடர்..! கனவென்ற மாயநதியில் கண்கள் நிறையட்டும் ..! மனம் திறக்கட்டும்..! கற்பனைகள் நீளட்டும்..! கரைந்து போ..! உன்னை மறந்து போ..! உலகம் தொலைந்து போ..! மறு உலகத்தைக் கண்டுபிடி..! உன் இமைகளைப் பூட்டு..! கனவுகள் மொய்க்கட்டும்..! வாழ்க்கை விரியட்டும்..! கார்த்திக் பிரகாசம்...
பெண்ணாய் இருப்பது கடினமென்றால் பெண்ணில் அவளாய் இருப்பது அதைவிடவும் கடினம்.. கார்த்திக் பிரகாசம்...
காதலும் காமமும் அவள் தர தீரா...!!! கார்த்திக் பிரகாசம்...
அலமாரியை பார்த்தப்படியே எந்தச் சட்டை அணியலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக அந்தச் சட்டைக் கண்ணில் பட்டது. கடைசியாக அந்தச் சட்டையணிந்து சில நாட்கள் தான் இருக்கும். இருந்தாலும் அந்தச் சட்டையிலேயே கண்கள் நிலைகுத்தி நின்றன. ஏதேதோ நினைவுகள் அலமாரியை விட்டு இறங்கி வந்து காட்சிப் பேழையாக கண்முன்னே விரிந்தன. அது நீலமும் கருப்பும் ஒன்றுக்கொன்று கலந்து நிறைந்திருக்கும் சட்டை. அவளுக்கு நீலம் பிடிக்கும். எனக்கு கருப்பு பிடிக்கும்.  இரண்டு நிறங்களும் நிறைந்திருப்பதால் எங்கள் இருவருக்கும் இந்தச் சட்டையைப் பிடிக்கும். அந்தச் சட்டை அணிந்திருந்த ஒருசமயம், இந்தச் சட்டையில் ஒரு தனித்தன்மை இருக்கிறது தெரியுமா.? சொல்கிறேன் கேள் என்றேன்.  அவள் ஆவலானாள்.! கருப்புடன் ஜோடி சேரும் அனைத்து நிறங்களுமே அழகாகும். ஏற்கனவே அழகாக இருப்பதுக்கூட கருப்புடன் சேரும்போது தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் மிச்ச அழகையும் மிச்சம் வைக்காமல் கொட்டிவிடும். அதுதான் கருப்பின் சிறப்பம்சம். ஆனால் கருப்பை அழகாக்கும் நிறங்கள் என்றுப் பார்த்தால் மிகக் குறைவு. என்னைப் பொறுத்தவரையில்  சிகப்பும் நீலமு...
நானிருக்கையில் உனக்கெதற்கு செல்லப் பிராணி என் செல்லமே.? என்னவாயினும் அதுவொரு மிருகம் தானே.! ஆம் அதுவொரு மிருகம் தான்.! ஆனால் சில சமயம் நீ உன் மிருகத்தனத்தைக் காட்ட...
ஆளில்லா விளையாட்டு மைதானத்தில் நான் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தேன். இரவுடன் அமைதி சத்தமாய்ப் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, ரத்தம் குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப் பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் குரல்களை அவை என் காதுகளில் பாட்டாய் பாடிச் சென்றன. எதிர்ப்பேதும் செய்யாமல் கவனமாய் கேட்டுக் கொண்டேன்.வெளிச்சங்கள் நிழல்களாக இல்லாமல் வெறுமனே தரையில் விழுந்து தற்கொலைக்கு முயன்றன. பார்வை மங்கிய மின்கம்ப விளக்குகள் தலைக்குனிந்து எதையோ வெகுநேரமாகத் தேடிக் கொண்டிருந்தன. கண்டுபிடிக்க முடியவில்லை போலும். நான் இருக்கும் வரையில் அவற்றின் தலை நிமிரவேயில்லை. கடைசியாய் வந்த காற்றும் காணாமல் போனது வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் தினக்கூலிகளை போல எந்தவித பரபரப்பும் இல்லாமல் அதன் போக்கில் மேகங்கள் கலையத் தொடங்கின. யாருமில்லா வானில் நிலவு மட்டும் வெளிச்சமாய் இருந்தது. மற்றுமொரு இரவில் நானும் நிலவும் தனியானோம். இரவுதான் விடியலுக்காகக் காத்திருக்கின்றது. இந்த நிலவு யாருக்காகக் காத்திருக்கின்றது. கார்த்திக் பிரகாசம்...

சிம்பா

"மேமா.. அழாத..! இந்தா.. இந்த சிம்பா'வ வெச்சிக்கோ..!" பியாவின் அந்த மழலைக் குரல் ராகவியின் காதுகளில் ஒலித்திடாத நாளில்லை. மலையாள மொழி ஆனந்தப் பூரிப்படையும் அந்த மழலையின் வாய்மொழியில், தனது அத்துனை துயரங்களையும் தூக்கியெறியும் தைரியம் வந்துவிடும் அவளுக்கு. அந்த மழலையின் முகத்தைக் கண்டாலே ராகவியின் மனம் எடையிழந்து லேசாகிப் போகும். முடங்கிப் போன வாழ்க்கையை மீட்டுத் தர வந்த தேவனின் தூதாகவே பியாவை நினைத்தாள் ராகவி. புயல் போல, எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு; கசப்புகளையும் காயங்களையும் மட்டும் நிறைய தந்து; தடம் தெரியாமல் சென்றுவிட்ட திருமண வாழ்க்கைக்கு பிறகு, ராகவிக்கு அமைந்த ஒரேயொரு ஆறுதல் தன்னுடைய அண்ணன் மகள் பியா மட்டும் தான். சிம்பா, அதுவொரு அழகிய சிங்க பொம்மை. ராகவி பியாவுக்கு வாங்கித் தந்தது. பியாவிற்கு அந்த பொம்மை என்றால் உயிர். தூங்குவது, குளிப்பது, பல் துலக்குவது, சாப்பிடுவது, விளையாடுவது என நாள் விடிந்தது முதல் பொழுது மடியும் வரை எல்லாமே சிம்பாவோடு தான். பெரிதும் எதிர்பார்த்த திருமண வாழ்க்கை சிறிதும் எதிர்பாராத விதமாக முடிந்துவிட, அமெரிக்கா சென்றுவ...