நானிருக்கையில்
உனக்கெதற்கு
செல்லப் பிராணி
என்
செல்லமே.?
என்னவாயினும்
அதுவொரு
மிருகம் தானே.!
ஆம்
அதுவொரு
மிருகம் தான்.!
ஆனால்
சில சமயம்
நீ உன்
மிருகத்தனத்தைக்
காட்டும் போது
மிருகமான
அவ்வஸ்து
மனிதக் குணத்தை
என்மீது காட்டும்.!
ஆறுதலுக்கு
அருகினில்
மனிதக் குணமுடைய
ஓர் உயிராவது
இருக்க வேண்டுமல்லவா.!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment