"மேமா.. அழாத..! இந்தா.. இந்த சிம்பா'வ வெச்சிக்கோ..!"
சிம்பா, அதுவொரு அழகிய சிங்க பொம்மை. ராகவி பியாவுக்கு வாங்கித் தந்தது. பியாவிற்கு அந்த பொம்மை என்றால் உயிர். தூங்குவது, குளிப்பது, பல் துலக்குவது, சாப்பிடுவது, விளையாடுவது என நாள் விடிந்தது முதல் பொழுது மடியும் வரை எல்லாமே சிம்பாவோடு தான்.
பெரிதும் எதிர்பார்த்த திருமண வாழ்க்கை சிறிதும் எதிர்பாராத விதமாக முடிந்துவிட, அமெரிக்கா சென்றுவிட முடிவுச் செய்தாள் ராகவி. அவள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையில் இருப்பதனால் அதற்கான வாய்ப்பும் சீக்கிரமே அமைந்தது. அமைந்தது என்பதைவிட அமைத்துக் கொண்டாள் என்ற பதம்தான் சரியானதாக இருக்கும்.அண்ணன் மகளாக இருந்தாலும், உருவத்திலும் குணத்திலும் தன்னைப் போலவே இருப்பதால் பியாவின் மீது ராகவிக்கு அளவில்லா பாசமும் காதலும் ஊற்றுப் போல நாள்தோறும் பெருகிய வண்ணமிருந்தது. தன்னுடைய குழந்தைப் பருவத்தை பியாவின் மூலமாக மீண்டுமொரு முறை வாழ்ந்துக் கொண்டாள். தனது நிகழ்கால சோகங்களை அந்த மழலையின் சிரிப்பில் மொத்தமாகக் கரைத்துவிட நினைத்தாள்.
"திருமணம் என்றுச் சொல்லி நடந்த அந்த பகல் கனவை மறப்பதற்காகவும், ஒரு மாற்றத்திற்காகவும் அமெரிக்கா செல்ல வேண்டும்" என்ற நிலையை எட்டியவள், பயணத் தேதி உறுதியானவுடன் பதற்றமடைந்தாள். யாருக்கும் காட்டிக் கொள்ளாமல் தனது கவலையைத் தள்ளிப் போட முயன்றாள். ஆனால் இந்தக் கவலை, இத்தனை நாள் கவலைகளை விட பெரும் கவலையாக மாறியது.பியாவை பிரிய வேண்டுமே என்று தினம் தினம் அழுதாள்.
அவள் அழுவதால், நாட்கள் நகராமல் நின்றுவிட போகிறதா என்ன..? பயண நாள் வந்தது.
விமான நிலையத்தில் குடும்பத்துடன் விமானம் பற்றிய அறிவிப்பிற்காகக் காத்திருந்தாள். இதயம் இயல்பை மீறித் துடித்தது. அறிவிப்பு வெளியான சமயம், ராகவியின் கண்களின் ஓரத்தில் லேசாக முதல் ஈரம் கசிந்தது. இரண்டாவது துளி கசிவதற்குள் வரிசையில் போய் நின்றாள். மொத்த உணர்வுகளையும் ஒரே கண்ணீர்த் துளியில் கட்டுப்படுத்திட நினைத்தால் முடியுமா.?
பியா அவள் பின்னாடியே ஓடிவந்து சந்தோசமாக, "மேமா நீ வானத்துல பறக்கப் போறியா..? மறுபடியும் எப்போ என்ன பாக்க பறந்து வருவ..?" என்றாள்.ராகவி பதில் சொல்வதற்குள் பியா திரும்பி ஓடிவிட்டாள்.
வரிசையில் பின்னால் நின்றுக் கொண்டிருந்தவர் ராகவியைப் பார்த்து, உங்க பொண்ணா..? என்றார்.
அவ்வளவு தான். தேக்கி வைத்த கண்ணீரெல்லாம், மதகை உடைத்து பாயும் வெள்ளத்தைப் போல இமைகளை இடித்துத் தள்ளி வெளிவந்தது. ஓடிப் போய் பியாவை வாரியணைத்து, மூச்சு விடக்கூட மறந்து முத்தத்தைப் பொழிந்தாள்.
கீழே விழுந்த சிம்பாவை எடுத்து, '"மேமா.. அழாத..! இந்தா.. இந்த சிம்பா'வ வெச்சிக்கோ..!" என்றுச் சொல்லி ராகவியின் கன்னத்தில் பிஞ்சு முத்தமிட்டாள் பியா.
விமானத்தில் ஏறுவதற்கானக் கடைசி அழைப்பு வந்தது. அழுதுக் கொண்டே ஏறினாள்.
அமெரிக்காவில் இறங்கும் போது ராகவி சிம்பாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
கார்த்திக் பிரகாசம்...
பியாவின் அந்த மழலைக் குரல் ராகவியின் காதுகளில் ஒலித்திடாத நாளில்லை. மலையாள மொழி ஆனந்தப் பூரிப்படையும் அந்த மழலையின் வாய்மொழியில், தனது அத்துனை துயரங்களையும் தூக்கியெறியும் தைரியம் வந்துவிடும் அவளுக்கு. அந்த மழலையின் முகத்தைக் கண்டாலே ராகவியின் மனம் எடையிழந்து லேசாகிப் போகும். முடங்கிப் போன வாழ்க்கையை மீட்டுத் தர வந்த தேவனின் தூதாகவே பியாவை நினைத்தாள் ராகவி. புயல் போல, எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு; கசப்புகளையும் காயங்களையும் மட்டும் நிறைய தந்து; தடம் தெரியாமல் சென்றுவிட்ட திருமண வாழ்க்கைக்கு பிறகு, ராகவிக்கு அமைந்த ஒரேயொரு ஆறுதல் தன்னுடைய அண்ணன் மகள் பியா மட்டும் தான்.
சிம்பா, அதுவொரு அழகிய சிங்க பொம்மை. ராகவி பியாவுக்கு வாங்கித் தந்தது. பியாவிற்கு அந்த பொம்மை என்றால் உயிர். தூங்குவது, குளிப்பது, பல் துலக்குவது, சாப்பிடுவது, விளையாடுவது என நாள் விடிந்தது முதல் பொழுது மடியும் வரை எல்லாமே சிம்பாவோடு தான்.
பெரிதும் எதிர்பார்த்த திருமண வாழ்க்கை சிறிதும் எதிர்பாராத விதமாக முடிந்துவிட, அமெரிக்கா சென்றுவிட முடிவுச் செய்தாள் ராகவி. அவள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையில் இருப்பதனால் அதற்கான வாய்ப்பும் சீக்கிரமே அமைந்தது. அமைந்தது என்பதைவிட அமைத்துக் கொண்டாள் என்ற பதம்தான் சரியானதாக இருக்கும்.அண்ணன் மகளாக இருந்தாலும், உருவத்திலும் குணத்திலும் தன்னைப் போலவே இருப்பதால் பியாவின் மீது ராகவிக்கு அளவில்லா பாசமும் காதலும் ஊற்றுப் போல நாள்தோறும் பெருகிய வண்ணமிருந்தது. தன்னுடைய குழந்தைப் பருவத்தை பியாவின் மூலமாக மீண்டுமொரு முறை வாழ்ந்துக் கொண்டாள். தனது நிகழ்கால சோகங்களை அந்த மழலையின் சிரிப்பில் மொத்தமாகக் கரைத்துவிட நினைத்தாள்.
"திருமணம் என்றுச் சொல்லி நடந்த அந்த பகல் கனவை மறப்பதற்காகவும், ஒரு மாற்றத்திற்காகவும் அமெரிக்கா செல்ல வேண்டும்" என்ற நிலையை எட்டியவள், பயணத் தேதி உறுதியானவுடன் பதற்றமடைந்தாள். யாருக்கும் காட்டிக் கொள்ளாமல் தனது கவலையைத் தள்ளிப் போட முயன்றாள். ஆனால் இந்தக் கவலை, இத்தனை நாள் கவலைகளை விட பெரும் கவலையாக மாறியது.பியாவை பிரிய வேண்டுமே என்று தினம் தினம் அழுதாள்.
அவள் அழுவதால், நாட்கள் நகராமல் நின்றுவிட போகிறதா என்ன..? பயண நாள் வந்தது.
விமான நிலையத்தில் குடும்பத்துடன் விமானம் பற்றிய அறிவிப்பிற்காகக் காத்திருந்தாள். இதயம் இயல்பை மீறித் துடித்தது. அறிவிப்பு வெளியான சமயம், ராகவியின் கண்களின் ஓரத்தில் லேசாக முதல் ஈரம் கசிந்தது. இரண்டாவது துளி கசிவதற்குள் வரிசையில் போய் நின்றாள். மொத்த உணர்வுகளையும் ஒரே கண்ணீர்த் துளியில் கட்டுப்படுத்திட நினைத்தால் முடியுமா.?
பியா அவள் பின்னாடியே ஓடிவந்து சந்தோசமாக, "மேமா நீ வானத்துல பறக்கப் போறியா..? மறுபடியும் எப்போ என்ன பாக்க பறந்து வருவ..?" என்றாள்.ராகவி பதில் சொல்வதற்குள் பியா திரும்பி ஓடிவிட்டாள்.
வரிசையில் பின்னால் நின்றுக் கொண்டிருந்தவர் ராகவியைப் பார்த்து, உங்க பொண்ணா..? என்றார்.
அவ்வளவு தான். தேக்கி வைத்த கண்ணீரெல்லாம், மதகை உடைத்து பாயும் வெள்ளத்தைப் போல இமைகளை இடித்துத் தள்ளி வெளிவந்தது. ஓடிப் போய் பியாவை வாரியணைத்து, மூச்சு விடக்கூட மறந்து முத்தத்தைப் பொழிந்தாள்.
கீழே விழுந்த சிம்பாவை எடுத்து, '"மேமா.. அழாத..! இந்தா.. இந்த சிம்பா'வ வெச்சிக்கோ..!" என்றுச் சொல்லி ராகவியின் கன்னத்தில் பிஞ்சு முத்தமிட்டாள் பியா.
விமானத்தில் ஏறுவதற்கானக் கடைசி அழைப்பு வந்தது. அழுதுக் கொண்டே ஏறினாள்.
அமெரிக்காவில் இறங்கும் போது ராகவி சிம்பாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment