பிரபஞ்சன் வருந்துகிறார்,
'பெரும்பாலும்
பெண்களின் மகிழ்ச்சி
தொலைப்பாளர்கள்
கணவர்களாக
தந்தையர்களாக
சகோதரர்களாகவே இருக்கிறார்கள்'
சரி தான்.
ஆணுக்கான பதவிகள்
அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும்
அடையாளமாக தரித்திருப்பவை
வெளியில் பாசாங்கு காட்டி
பவிசாக நகர்பவை
உறவில் அதிகாரம்
ஒருபோதும் உகந்ததாய் இருக்கலாகாது
கணவனாய் தந்தையாய் சகோதரனாய்
வாழ்வதில் என்ன இருக்கிறது
ஓர் நண்பனாய்
இருந்துவிட்டு போவோம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment