நண்பனின் திருமண ஆல்பம் புரட்டுகிறேன்
கண்களைக் குளிர்ச்சியாக்கும் வண்ணம்
தொடையில் வைத்தால் வழுக்கிச் செல்லும்
நைலான் மாதிரியான அட்டைகள்
அட்டையின்மேல் முழுவதும் இல்லை
ஆங்காங்கே வெல்வெட் அலங்காரங்கள்
கோணல் மாணல் இல்லாமல்
துல்லிய கோணத்தில் பதிய
தலைக் கீழாய் நின்று
மயிர்ப் பிய்த்து
மல்லாக்கப் படுத்து
இன்னும் எப்படியெல்லாமோ
வித்தையைக் கொட்டியிருக்கிறான்
புகைப்படக்காரன்
பளீரென்று
வெளிச்சத்தை தெளிக்கும்
மஞ்சள் விளக்கும்
முகத்திலுள்ள மாசு மருக்களை
மூடி மறைக்கும்
அதிநவீன ஆடிகளும்
அவர்களின் முகத்தில் ஏதோ
அவசரத்தையும் அசௌகரித்தையும்
அறைந்திருக்கக் கூடும்
பார்வையும் புன்னகையும்
பதற்றத்தினால்
யதார்த்தமாக இல்லை
தொடுவது போல் தொட்டும்
சாய்வது போல் சாய்ந்தும்
ஊட்டுவது போல் ஊட்டியும்
பொய் கோபம் போல் கோபம் காட்டியும்
கொஞ்சுவது போல் கொஞ்சியும்
பதிய வைக்கப்பட்டுள்ள
படங்களில்
கண்காட்சியாய் துறுத்தி
நிற்கிறது செயற்கைத் தனம்
யதார்த்தமென்று நம்பவைக்க
எடுக்கப்பட்ட
யதார்த்தமில்லா படங்களை
என்னவென்று சொல்ல
ஆங்கில
வார இதழைப் போல்
சடசடவென புரட்டி
முடித்துவிட்டேன்
கார்த்திக் பிரகாசம்...
கண்களைக் குளிர்ச்சியாக்கும் வண்ணம்
தொடையில் வைத்தால் வழுக்கிச் செல்லும்
நைலான் மாதிரியான அட்டைகள்
அட்டையின்மேல் முழுவதும் இல்லை
ஆங்காங்கே வெல்வெட் அலங்காரங்கள்
கோணல் மாணல் இல்லாமல்
துல்லிய கோணத்தில் பதிய
தலைக் கீழாய் நின்று
மயிர்ப் பிய்த்து
மல்லாக்கப் படுத்து
இன்னும் எப்படியெல்லாமோ
வித்தையைக் கொட்டியிருக்கிறான்
புகைப்படக்காரன்
பளீரென்று
வெளிச்சத்தை தெளிக்கும்
மஞ்சள் விளக்கும்
முகத்திலுள்ள மாசு மருக்களை
மூடி மறைக்கும்
அதிநவீன ஆடிகளும்
அவர்களின் முகத்தில் ஏதோ
அவசரத்தையும் அசௌகரித்தையும்
அறைந்திருக்கக் கூடும்
பார்வையும் புன்னகையும்
பதற்றத்தினால்
யதார்த்தமாக இல்லை
தொடுவது போல் தொட்டும்
சாய்வது போல் சாய்ந்தும்
ஊட்டுவது போல் ஊட்டியும்
பொய் கோபம் போல் கோபம் காட்டியும்
கொஞ்சுவது போல் கொஞ்சியும்
பதிய வைக்கப்பட்டுள்ள
படங்களில்
கண்காட்சியாய் துறுத்தி
நிற்கிறது செயற்கைத் தனம்
யதார்த்தமென்று நம்பவைக்க
எடுக்கப்பட்ட
யதார்த்தமில்லா படங்களை
என்னவென்று சொல்ல
ஆங்கில
வார இதழைப் போல்
சடசடவென புரட்டி
முடித்துவிட்டேன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment