Skip to main content

வார்த்தைகள் தான் எல்லாம்

எச்சிலாய் வார்த்தைகளைத்
துப்பி விடுகிறார்கள்
எளிதில் உலர்வதில்லை
வார்த்தைகள்
எச்சில் போல்

ஆயிரம் கத்தி குத்தல்களின்
பலம் கொண்டவை
உடைந்த கண்ணாடிச் சில்லுகளின்
கூர்மையை ஒத்தவை

'ஒரு வார்த்தையில் என்ன குடியா முழுகிவிட்டது'
என்று மீனைப் போல
நழுவிட முடியாது

உடல் முழுதும் காதுகள் கொண்ட மனிதனுக்கு
வார்த்தைகள் தான் எல்லாம்
வார்த்தைகள் தான் வாழ்க்கை

கார்த்திக் பிரகாசம்...

Comments