கடனுக்குக் காய்கறி அரிந்து
வெறுமனே எண்ணெய்யில் பொரித்துப்
படைக்கப்படும் உணவு
பண்டங்கள் அல்ல
அவளின் நோக்கம் உயர்ந்தது
பசி தீர்ந்தால் மட்டும் போதாது
வாழ்வில் பசியோடு கழித்த
நாட்களுக்கும் சேர்த்து
வயிறார உண்ண வேண்டும்
பட்டினியால் ஒடுங்கிப் போயிருக்கும்
உதரம் உயிர்த்தெழ வேண்டும்
உணவின் சுவையை
உப்பு காரம் புளி மட்டும்
தீர்மானிப்பதில்லை
அள்ளி வைக்கும் கைகளும்
அந்த கைகளில்
உரிமையான அதட்டல்
இருக்கும்
உண்மையான அன்பு
இருக்கும்
தாய்மையின் கருணை
இயல்பாகவே நிரம்பி
இருக்கும்
கார்த்திக் பிரகாசம்...
வெறுமனே எண்ணெய்யில் பொரித்துப்
படைக்கப்படும் உணவு
பண்டங்கள் அல்ல
அவளின் நோக்கம் உயர்ந்தது
பசி தீர்ந்தால் மட்டும் போதாது
வாழ்வில் பசியோடு கழித்த
நாட்களுக்கும் சேர்த்து
வயிறார உண்ண வேண்டும்
பட்டினியால் ஒடுங்கிப் போயிருக்கும்
உதரம் உயிர்த்தெழ வேண்டும்
உணவின் சுவையை
உப்பு காரம் புளி மட்டும்
தீர்மானிப்பதில்லை
அள்ளி வைக்கும் கைகளும்
அந்த கைகளில்
உரிமையான அதட்டல்
இருக்கும்
உண்மையான அன்பு
இருக்கும்
தாய்மையின் கருணை
இயல்பாகவே நிரம்பி
இருக்கும்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment