நீங்கள் கவலையோடு இருக்கிறீர்கள்
உங்களை மகிழ்விக்கவே
மழை பெய்கிறது
நீங்கள் சோர்வுற்று இருக்கிறீர்கள்
உங்களை உற்சாகப்படுத்தவே
மழை பெய்கிறது
நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள்
உங்களை ஈரப்படுத்தவே
மழை பெய்கிறது
நீங்கள் உணர்வற்று இருக்கிறீர்கள்
உங்களை உய்விக்கவே
மழை பெய்கிறது
நீங்கள் நம்பிக்கையற்று இருக்கிறீர்கள்
உங்களை ஆற்றுப்படுத்தவே
மழை பெய்கிறது
நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள்
உங்களைக் கொஞ்சவே
மழை பெய்கிறது
நீங்கள் நினைக்க ஆளில்லாமல் இருக்கிறீர்கள்
உங்களை நனைத்துப் பார்க்கவே
மழை பெய்கிறது
நீங்கள் சிரிக்க மறந்தவராக இருக்கிறீர்கள்
உங்களைச் சிரிக்க வைக்கவே
மழை பெய்கிறது
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்
உங்களை இரட்டிப்பு மகிழ்ச்சியாக்கவே
மழை பெய்கிறது
மழை பெய்கிறது
நீங்கள் சோர்வுற்று இருக்கிறீர்கள்
உங்களை உற்சாகப்படுத்தவே
மழை பெய்கிறது
நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள்
உங்களை ஈரப்படுத்தவே
மழை பெய்கிறது
நீங்கள் உணர்வற்று இருக்கிறீர்கள்
உங்களை உய்விக்கவே
மழை பெய்கிறது
நீங்கள் நம்பிக்கையற்று இருக்கிறீர்கள்
உங்களை ஆற்றுப்படுத்தவே
மழை பெய்கிறது
நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள்
உங்களைக் கொஞ்சவே
மழை பெய்கிறது
நீங்கள் நினைக்க ஆளில்லாமல் இருக்கிறீர்கள்
உங்களை நனைத்துப் பார்க்கவே
மழை பெய்கிறது
நீங்கள் சிரிக்க மறந்தவராக இருக்கிறீர்கள்
உங்களைச் சிரிக்க வைக்கவே
மழை பெய்கிறது
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்
உங்களை இரட்டிப்பு மகிழ்ச்சியாக்கவே
மழை பெய்கிறது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment