இப்பொழுதெல்லாம்
யாருக்கும் என் முகம்
தேவைப்படுவதில்லை
குரல் மட்டுமே அவர்களுக்கு
போதுமானதாக இருக்கிறது
குரலை வைத்து நான் தான் என
அறிந்து கொள்கிறார்கள்
என்றோ ஒரு நாள் சந்திக்கும் வேளையில்
என்னை அடையாளம் தெரியாமல் போகலாம்
ஆதலால் என் குரலைப் பத்திரப்படுத்த வேண்டும்
என்னிடம் இருக்கும் உங்கள் குரல்களையும் தான்
யாருக்கும் என் முகம்
தேவைப்படுவதில்லை
குரல் மட்டுமே அவர்களுக்கு
போதுமானதாக இருக்கிறது
குரலை வைத்து நான் தான் என
அறிந்து கொள்கிறார்கள்
என்றோ ஒரு நாள் சந்திக்கும் வேளையில்
என்னை அடையாளம் தெரியாமல் போகலாம்
ஆதலால் என் குரலைப் பத்திரப்படுத்த வேண்டும்
என்னிடம் இருக்கும் உங்கள் குரல்களையும் தான்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment