ழ'கரத்தை உச்சரிக்கும்
பதற்றம் இருந்தது
முதல் கலவியில்
ஆர்வமும் ஆசையும்
அறியாமையில் மறைந்து
அச்சத்தில் ஊறியது
காகிதத்திற்கு வலிக்காமல்
எழுதுவது சாத்தியமா?
கசங்கும் காகிதத்தின் ஓசை
வலியின் முனங்கல் வசவா?
சுகத்தின் பிதற்றல் மொழியா?
தூவலின் சிதறல் துளிகள்
எழுத்துரு பெறவில்லை
வலி மிகா இடங்களுக்கும் வலி மிகுந்தது
அச்சுப் பிழைகளுடன்
அச்சானது முதல் பிரதி
ஓர் நன்மழை நாளில்
காற்றின் சுழலுக்கு அசைந்தாடிய
பக்கங்கள் சில உண்மைகளைப் புலப்படுத்தியது
மெல்லிய உரசல்களில் மின்சாரம் பாய்ந்த
தூவல் தானே
பக்கங்களைத் தீண்டியது
வார்த்தைகளை வடித்தது
வலி மிகும் மிகா இடங்கள்
ஒருவாறு வழிக்கு வந்தன
வலியும் சுகமும் வேறு வேறில்லை
வசவு வசமானது
பிதற்றலும் புரிந்தது
தீராப் பக்கங்களில் தேடுதல்
தொடர்கிறது
பிரதி நீள்கிறது
கார்த்திக் பிரகாசம்...
முதல் கலவியில்
ஆர்வமும் ஆசையும்
அறியாமையில் மறைந்து
அச்சத்தில் ஊறியது
காகிதத்திற்கு வலிக்காமல்
எழுதுவது சாத்தியமா?
கசங்கும் காகிதத்தின் ஓசை
வலியின் முனங்கல் வசவா?
சுகத்தின் பிதற்றல் மொழியா?
தூவலின் சிதறல் துளிகள்
எழுத்துரு பெறவில்லை
வலி மிகா இடங்களுக்கும் வலி மிகுந்தது
அச்சுப் பிழைகளுடன்
அச்சானது முதல் பிரதி
ஓர் நன்மழை நாளில்
காற்றின் சுழலுக்கு அசைந்தாடிய
பக்கங்கள் சில உண்மைகளைப் புலப்படுத்தியது
மெல்லிய உரசல்களில் மின்சாரம் பாய்ந்த
தூவல் தானே
பக்கங்களைத் தீண்டியது
வார்த்தைகளை வடித்தது
வலி மிகும் மிகா இடங்கள்
ஒருவாறு வழிக்கு வந்தன
வலியும் சுகமும் வேறு வேறில்லை
வசவு வசமானது
பிதற்றலும் புரிந்தது
தீராப் பக்கங்களில் தேடுதல்
தொடர்கிறது
பிரதி நீள்கிறது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment