Skip to main content

வாசனை

கிழிந்து போன 
ரூபாய்த் தாள்களில் 
அப்பாவின் வாசனை
மீந்துப் போன 
உணவுப் பண்டங்களில் 
அம்மாவின் வாசனை
பயனற்றுப் போன 
பழைய குப்பைகளிலெல்லாம் 
நான் மட்டும் அறிந்த 
எந்தன் வாசனை  

கார்த்திக் பிரகாசம்...

Comments