Skip to main content

வெள்ளிக்கிழமை இரவு

ஒவ்வொரு
வெள்ளிக்கிழமை இரவும்
புத்தாண்டிற்கானக் கொண்டாட்டம்
மனதிற்கு நெருக்கமானது

வெள்ளிக்கிழமை இரவு
கவலை அறியாதது
அது கனவுகளுக்கானது

வெள்ளிக்கிழமை இரவு
நிம்மதியோடு வருவது
நம்பிக்கையோடு விடிவது

வெள்ளிக்கிழமை இரவு
ஓய்வளிக்க வருவது
உறக்கத்திற்கு ஒத்தாசையாக இருப்பது

இரவுகளில்
வெள்ளிக்கிழமை இரவுக்கு
ஆயுள் அதிகம்

கார்த்திக் பிரகாசம்...

Comments