அன்றே சொல்லியிருக்க வேண்டும்
தயங்கி நின்றிருக்கக் கூடாது
ஆனந்தமாய் பெய்திடும் மழை
அடுத்த ஏதாவதொரு நிமிடத்தில்
நின்றிடும் என்பதை உணர்ந்திருக்கவில்லை
வானவில் அணிந்த உள்ளக் குமிழியை
நீ ஊசியால் குத்த உடைந்து போனது என் வானம்
வானமற்று இருப்பதை விடக் கொடுமை
உன் வாசமற்று இருந்து தொலைப்பது
தாமதமாய் சேதி சொல்லும்
காலத்திற்குப் பதிலற்று
முழிக்கிறது தலைவிதி
கார்த்திக் பிரகாசம்...
ஆனந்தமாய் பெய்திடும் மழை
அடுத்த ஏதாவதொரு நிமிடத்தில்
நின்றிடும் என்பதை உணர்ந்திருக்கவில்லை
வானவில் அணிந்த உள்ளக் குமிழியை
நீ ஊசியால் குத்த உடைந்து போனது என் வானம்
வானமற்று இருப்பதை விடக் கொடுமை
உன் வாசமற்று இருந்து தொலைப்பது
தாமதமாய் சேதி சொல்லும்
காலத்திற்குப் பதிலற்று
முழிக்கிறது தலைவிதி
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment