ஊரடங்கின் சூன்யம் தாங்காமல்
முன்னிலிருந்து நெடுந்தூரம்
பயணம் செய்து
பின் தெருவில் வசிக்கும்
என் வீட்டிற்கு வந்தான் நண்பன்
வேறு இடம் வெவ்வேறு முகங்கள்
சூன்யத்தை தொலைக்கக்
குறைந்தபட்ச மாற்றமென நம்பிக்கை
சோர்வைப் பூசிய முகங்களில்
வழக்கமான விசாரிப்புகள்
சுவாரசியம் தராத பேச்சு
சுரத்தையில்லாத சிரிப்பு
மாற்றி மாற்றி மறுத்துப் போன
டிவி ரிமோட் பட்டன்கள்
சூன்யத்தில் தொடங்கி
சூன்யத்தில் முடிந்த உரையாடல்கள்
சர்வ இடத்திலும் சகல முகங்களிலும்
விழியில் விழும் வெளியெங்கும்
அள்ளியப்பிய சூன்யம்
தாளமுடியவில்லை
சூன்யம் சுமந்து வந்தவன் சென்றுவிட்டான்
சூன்யத்துடனே
கார்த்திக் பிரகாசம்...
முன்னிலிருந்து நெடுந்தூரம்
பயணம் செய்து
பின் தெருவில் வசிக்கும்
என் வீட்டிற்கு வந்தான் நண்பன்
வேறு இடம் வெவ்வேறு முகங்கள்
சூன்யத்தை தொலைக்கக்
குறைந்தபட்ச மாற்றமென நம்பிக்கை
சோர்வைப் பூசிய முகங்களில்
வழக்கமான விசாரிப்புகள்
சுவாரசியம் தராத பேச்சு
சுரத்தையில்லாத சிரிப்பு
மாற்றி மாற்றி மறுத்துப் போன
டிவி ரிமோட் பட்டன்கள்
சூன்யத்தில் தொடங்கி
சூன்யத்தில் முடிந்த உரையாடல்கள்
சர்வ இடத்திலும் சகல முகங்களிலும்
விழியில் விழும் வெளியெங்கும்
அள்ளியப்பிய சூன்யம்
தாளமுடியவில்லை
சூன்யம் சுமந்து வந்தவன் சென்றுவிட்டான்
சூன்யத்துடனே
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment