விரும்பாதவொன்றை வலிந்து பரிசளிக்கும்
வன்முறையை நீ பயின்றிருந்த சமயத்திலே தான்
மௌனத்தால் வீழ்த்திடும் வித்தையை
நன்கு கற்றறிந்தேன்
கோபப் பெருக்கில்
இடதுபுற கூரலை
அனாசியமாக ஒதுக்கிவிட்டு உள்ளறையில்
நீ பூட்டிக் கொண்டபோதெல்லாம்
பொதி சுமக்கும் கழுதையைப் போல
கனத்திருந்தேன்
கோடை வெக்கையில்
இரவிலும் ஈரம் பிசுக்கு பிசுக்கென
மேனியெங்கும் பசை போல் ஒட்ட
லேசான இளம் வெயில் சூட்டில்
அருவியில் குளிக்கும் சுகத்தை
அனுபவித்திருந்தேன்
விளம்பர அழுகையால் உணர்ச்சிகளோடு
வியாபாரம் செய்ய முனைந்தாயே
அன்றைய இரவை மட்டும் தான்
இன்றுவரை மறக்க முயன்றவாறிருக்கிறேன்
கவனிக்காத காதலும்
காலத்துக்குமான ஒரு முத்தமும்
சிதிலமடைந்து கிடக்கிறது
அவ்விரவின் சவப்பெட்டிக்குள்
கார்த்திக் பிரகாசம்...
மௌனத்தால் வீழ்த்திடும் வித்தையை
நன்கு கற்றறிந்தேன்
கோபப் பெருக்கில்
இடதுபுற கூரலை
அனாசியமாக ஒதுக்கிவிட்டு உள்ளறையில்
நீ பூட்டிக் கொண்டபோதெல்லாம்
பொதி சுமக்கும் கழுதையைப் போல
கனத்திருந்தேன்
கோடை வெக்கையில்
இரவிலும் ஈரம் பிசுக்கு பிசுக்கென
மேனியெங்கும் பசை போல் ஒட்ட
லேசான இளம் வெயில் சூட்டில்
அருவியில் குளிக்கும் சுகத்தை
அனுபவித்திருந்தேன்
விளம்பர அழுகையால் உணர்ச்சிகளோடு
வியாபாரம் செய்ய முனைந்தாயே
அன்றைய இரவை மட்டும் தான்
இன்றுவரை மறக்க முயன்றவாறிருக்கிறேன்
கவனிக்காத காதலும்
காலத்துக்குமான ஒரு முத்தமும்
சிதிலமடைந்து கிடக்கிறது
அவ்விரவின் சவப்பெட்டிக்குள்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment