விடிந்ததும் முதலில்
துணையவளை அமரவைத்து
அன்பாகப் பேசி
அவளின் கை கால்களைப் பிடித்துவிட்டு
ஆசையாக முத்தம் பதியனும்
எவ்வளவு நாட்கள் ஆயிற்று
வெயில் பட்டு வதங்கிய
தோட்டத்துச் செடிகளுக்குத்
தண்ணீர் ஊற்ற வேண்டும்
வேலைக்காரியை வேறு
நேற்று இழிச் சொற்களால் ஏசி விட்டேன்
அவளிடம் மனம் திறந்த
மன்னிப்பு கோர வேண்டும்
கௌரவ குறைச்சல் எனக் கைவிட்ட
வசதி தொலைத்த
பழைய சினேகிதனைச் சந்தித்து
பள்ளி வாழ்வை
மனம் கோணாமல்
அளவளாவ வேண்டும்
கூடவே அந்தப் பால்ய காதலையும்
அசிங்கம் அநாகரிகமென அறைந்து
அடித்தொடுக்கிய மகளை
அமைதி செய்து
அவள் அறிமுகம் செய்த
அவளின் வேற்றுசாதி காதலனை
விருந்திற்கு அழைத்து
மணநாளை முடிவு செய்ய வேண்டும்
என்னென்னமோ திட்டமிட்டதில்
கணக்கில் இது விடுபட்டதே
சாமர்த்தியமென நினைத்தது
சடுதியில் முடிந்துவிட்டதே
பலன் தேடிய நாட்களில்
நலன் தொலைந்தறிய வில்லையே
என்னுடல் எனக்கே
சொந்தமில்லாமல் போயிற்றே
மனவெளியில் எந்தன் சாயலையொத்த
ஒருகுரல் துடித்து ஒப்பாரியது
முந்தைய இரவின் கனவிலே
நான் இலகுவாக இறந்திருந்தேன்
ஈக்கள் மொய்க்க
நெடுஞ்சாண்கிடையாக
கிடத்தப்பட்டிருந்தது என்னுடல்
கார்த்திக் பிரகாசம்...
துணையவளை அமரவைத்து
அன்பாகப் பேசி
அவளின் கை கால்களைப் பிடித்துவிட்டு
ஆசையாக முத்தம் பதியனும்
எவ்வளவு நாட்கள் ஆயிற்று
வெயில் பட்டு வதங்கிய
தோட்டத்துச் செடிகளுக்குத்
தண்ணீர் ஊற்ற வேண்டும்
வேலைக்காரியை வேறு
நேற்று இழிச் சொற்களால் ஏசி விட்டேன்
அவளிடம் மனம் திறந்த
மன்னிப்பு கோர வேண்டும்
கௌரவ குறைச்சல் எனக் கைவிட்ட
வசதி தொலைத்த
பழைய சினேகிதனைச் சந்தித்து
பள்ளி வாழ்வை
மனம் கோணாமல்
அளவளாவ வேண்டும்
கூடவே அந்தப் பால்ய காதலையும்
அசிங்கம் அநாகரிகமென அறைந்து
அடித்தொடுக்கிய மகளை
அமைதி செய்து
அவள் அறிமுகம் செய்த
அவளின் வேற்றுசாதி காதலனை
விருந்திற்கு அழைத்து
மணநாளை முடிவு செய்ய வேண்டும்
என்னென்னமோ திட்டமிட்டதில்
கணக்கில் இது விடுபட்டதே
சாமர்த்தியமென நினைத்தது
சடுதியில் முடிந்துவிட்டதே
பலன் தேடிய நாட்களில்
நலன் தொலைந்தறிய வில்லையே
என்னுடல் எனக்கே
சொந்தமில்லாமல் போயிற்றே
மனவெளியில் எந்தன் சாயலையொத்த
ஒருகுரல் துடித்து ஒப்பாரியது
முந்தைய இரவின் கனவிலே
நான் இலகுவாக இறந்திருந்தேன்
ஈக்கள் மொய்க்க
நெடுஞ்சாண்கிடையாக
கிடத்தப்பட்டிருந்தது என்னுடல்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment