Skip to main content

எப்போதும் பெண்

மதிய நேரம். சூரியனை மறைத்தனுப்பிவிட்டு பெரும் இடி சத்தத்துடன் மடியிலிருந்து அடைமழையை அவிழ்த்தன கருமேகங்கள்.

'அழாத' தோளில் தட்டினாள் அன்புக்கரசி.

அழுகை நிற்கவில்லை.. தொடர்ந்து தேம்பிக் கொண்டே இருந்தாள் சங்கவி...

'அழாம என்ன ஆச்சுன்னு சொல்லுடி'

விசும்பல் குறைவது போலிருந்தது. இன்னும் கொஞ்சம் நகர்ந்து நெருக்கத்தில் அமர்ந்தாள் அன்புக்கரசி.

"யார நம்பறதுனே தெரியல அம்மா. உயிருக்கு உயிரா, உண்மையா சொல்லணும்னா அதுக்கும் மேல முக்கியமா நெனைச்ச ஒருத்தன் ஒருமுறை என்கூட படுங்கிறான். ஏதாவது விபரீதம் பண்ணலாம்னு யோசிக்காத அப்றம் உன் உடம்ப ஊரே பாக்கும்னு மெரட்டறான். மழைல நனைஞ்ச ஒருநாள் அவன் ரூம்க்கு போய் நான் ட்ரெஸ் மாத்துனத வீடியோ புடிச்சி வச்சிருக்கானாம். அவன் சொல்ற மாதிரி செய்யலன்னா அந்த வீடியோவ நெட்ல விட்ருவன்னு சொல்றான். ரொம்ப பயமா இருக்கு. அவன எவளோ நம்புனேன் தெரியுமா அம்மா" தோளில் சாய்ந்து மீண்டும் பெரும் தேம்பலோடு அழத் தொடங்கினாள்

அம்மாவாக இருந்தாலும் அவள் சங்கவியோடு ஒரு தோழியைப் போலவே இருந்தாள். சங்கவிக்கும் அம்மாதான் முதல் தோழி. அவளின் அத்துணை விஷயங்களும் அம்மாவிற்குத் தெரியும். சங்கவியே சொல்லிவிடுவாள். இப்பொழுதும்கூட அந்தத் தோழமை உணர்வில்தான் சங்கவி இந்த விஷயத்தைத் தன்னிடம் சொல்லியிருக்கிறாள் என்பதை உணர்ந்தே இருந்தாள் அன்புக்கரசி.

இருப்பினும் அவள் சொன்ன விஷயம் உண்டாக்கிய அதிர்ச்சியில் உறைந்து போனவளாய் அமர்ந்திருந்தாள்.

இருவருக்குமிடையில் மௌனம் பெரும் புயலாய் வீசியது.

அடைமழை தளர்ந்து தூறலாகிய சமயம் மறைந்து போன சூரியன் மெல்ல மேலே வந்தது. சன்னலைத் தாண்டி வெளிச்சம் அறையினுள் ஊடுருவியது.

கலங்கிய கண்களை லேசாகத் துடைத்துக் கொண்டு சங்கவியை தோளில் இருந்து எழுப்பினாள்.

                                  ******************************************

என் வாழ்நாளில் மறப்பதிற்கில்லை.

'அந்த இடம்' தான்.

சாக்கடை ஓடுதே. அதுக்கு பின்னாடி சந்துல தான் நம்ம தாத்தா பாட்டி வீடு இருந்துச்சு. அந்தக் காலத்துக் கார வீடு. மொட்டமாடிலாம் கூட இருக்கும். உறவுக்காரங்க எந்த விசேசமானாலும் நம்ம வீட்டுக்கு வந்து கைய நனைச்சுட்டு தான் போவாங்க. பாட்டி மேல அவ்வளவு மரியாத. ஒருவிதமான பயம் கலந்த மரியாதன்னு கூடச் சொல்லலாம். ஏன்னா பாட்டியோட பொறந்தவங்க மொத்தம் எட்டுபேர். எட்டுமே பொண்ணுங்க. நாம பாட்டி தான் எல்லாருக்கும் மூத்தது. எட்டு பேத்தையும் ஒத்த ஆளா இருந்து கவனிச்சுக்கும். ஒரு குரல் விட்டா போதும் எல்லாரும் அலறிக்கிட்டு பாட்டி முன்னாடி வந்து நிப்பாங்க. சுறுசுறுக்குனு பேசிடுமே தவிர வெள்ளந்தியான மனசு. குடும்பத்த கட்டுக்கோப்பா கொண்டு போனதால தாத்தாவும் பாட்டிகிட்ட அடிமையா இருந்தாரு. பாட்டிமேல மொத்த நம்பிக்கையும் வச்சிருந்தாரு. அவள ஆழமா நேசிச்சாரு.

மளிகை சாமான் காய்கறின்னு எது வாங்கனாலும் இந்த ரோட்டுக்குத் தான் வரணும்.மெயின் ரோடுகிங்றதால எப்ப பாத்தாலும் ஜன நடமாட்டமா இருக்கும். தினம் ஒரு சந்தை போடுவாங்க. ஒரு நாள் காய்கறி. ஒருநாள் மீன் கருவாடு. ஒருநாள் புளி வேர்க்கடலை வெங்காயம். ஒருநாள் பிளாஸ்டிக் ஜக்கு, துணி கைப்பை, கயிறு தட்டுமுட்டு சாமான்னு எல்லாம் போடுவாங்க. ஒரு மூச்சா எல்லாத்தையும் ஒரே இடத்துல வாங்கிறலாம். கடைக்கு போறப்பெல்லாம் தாத்தா என்னையும் கூட்டிட்டு போவாரு. அதுக்கே பாட்டி திட்டுவாங்க. வயசுக்கு வந்த பொம்பள புள்ளைய நேரங்கெட்ட நேரத்துல தெருவுல கூட்டிட்டு போறிங்கனு. ஆனா என் விஷயத்துல மட்டும்தான் அப்பா எப்பவும் அம்மா பேச்ச கேட்டதில்லை. 'விடுமா விடுமா.. புள்ள பொக்குனு போய்டும்'னு சொல்லிச் சொல்லியே கண்ண காட்டி சமாளிச்சுருவாரு.

அன்றைக்கு மழை நாள். இதே மாதிரிதான் சொத சொதன்னு நனைஞ்சி கெடந்தது ஊரு. அப்பாவுக்கு மேல் காய்ச்சல். அடுப்புல ஒல கொதிச்சிருச்சு நீ போய் மிளகுத் தூள் மட்டும் வாங்கிட்டு சீக்கிரமா வாடின்னு அம்மா சொன்னா.

அதோ சூப்பர் மார்க்கெட் இருக்கே அந்த இடத்துல அப்போ சின்னதா ஒரு மளிகைக் கடை இருந்தது. கடைல நாலஞ்சு பேர் நின்னுகிட்டு இருந்தாங்க. நான் அவங்க பின்னாடியே மிளகுத் தூள் கொடுங்கனு கைய நீட்டி நின்னுட்டு இருந்தேன். என் பின்னாடி யாரோ உரசுர மாதிரி இருந்துச்சு. திரும்பி பார்க்காம கொஞ்சம் தள்ளி நின்னேன். மறுபடியும் உரசல்.

'அண்ணே. சீக்கிரம் கொடுங்கனே நான் போறேன்'னு சொல்லிட்டு திரும்புறேன் ஒருத்தன் என் ரெண்டு மாரையும் புடிச்சி நல்லா அழுத்திட்டான்.

'கூட்டத்துல தெரியாம பட்டுருச்சு சாரி'னு சொல்லிட்டு அவன் பாட்டுக்கு வண்டிய எடுத்துட்டு போய்ட்டான். சுத்தி இருந்தவங்க யாரும் அவன எதும் கேக்கல. 'ஏன்டி. வயசுக்கு வந்த புள்ள மார மறைக்காம இப்படிக் குலுங்கக் குலுங்க வந்துருக்கியே. பாக்கறவன் கண்ணும் கையும் சும்மாவா இருக்கும் மேல துண்டு கிண்டு போட்டு வரக்கூடாது...' என்ன திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. எனக்குப் பயங்கர அவமானமா போயிடுச்சு. அழுதுகிட்டே வீட்டுக்கு ஓடிட்டேன்.

ஏழெட்டு நாள் வீட்ட விட்டு வெளியவே வரல. காய்ச்சல் வந்துருச்சு. அம்மாவும் என்ன ஏதுன்னு ரெண்டு நாள் கேட்டா. மூணாவது நாள் அப்பாட்ட இருந்து உனக்கும் காய்ச்சல் ஒட்டிக்கிடிச்சுன்னு வைத்தியம் பாத்தா. அவ்வளவு தான். அம்மாகிட்ட இதப்பத்தி சொல்லவே இல்ல. நெனச்சாலே உடம்பெல்லாம் வெடவெடத்து போய்டும். பெரம புடிச்ச மாதிரி உக்காந்துட்டு இருப்பேன். அந்த சமயத்துல அம்மாவ அப்பா தொட்டு பேசுறத பாத்தா கூட எரிச்சலா இருக்கும்.

கொஞ்சம் கொஞ்சமா வயசுக்கான அனுபவமும் புரிதலும் வந்த பிறகு தான் அந்த விஷயத்துல இருந்து வெளிய வந்தேன். அது என் தப்பு இல்ல. எவனோ ஒரு பொறுக்கி என் இஷ்டம் இல்லாம அசிங்கமா தொட்டதுக்கு நான் ஏன் வருத்தப்படனும். என்னத்துக்கு வீட்டுக்குள்ளேயே அடைஞ்சிக் கெடக்கணும்னு தோணுச்சு. செருப்ப கழட்டி அவன் கன்னத்துல பளார் பளார்ன்னு அறையாம விட்டோமேன்னு கோவம் கோவமா வந்தது.

அம்மாவின் முகத்தைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தாள் சங்கவி.

இது உன்னோட தப்பு இல்ல சங்கவி. தன்னோட சுயரூபத்த, நம்பிக்க முகமூடிய மாட்டி மறைச்சிகிட்டு, இந்த மாதிரி வக்கிரமான மிருகங்க நம்மகூடவே உலவிக்கிட்டு இருக்குதுங்க. இதுங்களோட உண்மையான முகம் தெரியும் போது நாம ஒடஞ்சிப் போய்டுறோம் அது மனசோட இயல்பு பரவாயில்ல ஆனா இதுங்கள பாத்து நாம பயப்படக் கூடாது. நம்மளோட பயம்தான் பொண்ணுங்கள வெறும் உடம்பா பாக்குற இந்த ஜென்மங்களுக்கு ஆயுதமா மாறிடுது. காலகாலத்துக்கு முன்னாடி பொண்ணுங்க உடல புனிதமாக்கி, தன்னுடைய உடல் புனிதம்னு பொண்ணுங்களையே நம்ப வச்சி, அத தங்களோட இச்சைக்கும் வக்கிர புத்திக்கும் சுய லாபத்துக்கும் பயன்படுத்திகிட்ட ஆணாதிக்க கும்பலோட நீட்சிதான் இவன். இதே அவன அம்மணமா வீடியோ எடுத்து போட்ருவேனு சொல்லிப்பாரு. மயிர்'ல கூட சட்ட பண்ண மாட்டான். காரணம் இந்த புனித பிம்பம் தான்.

பெண்ணோட விருப்பம் இல்லாம அவள தொடரதுக்கும், அவளுக்குத் தெரியாம அவளோட உடல வீடியோ எடுக்குறதுக்கும், படுக்க கூப்பிட்றதுக்கும் முதல்ல ஆம்பளதான் வெக்கப்படணும். அவனோட கையாலாகாத தனம் தான் இந்த வெத்து மிரட்டல் கூச்செல்லலாம்.

மேகங்கள் மூட மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இருவரும் வீட்டிற்குக் கிளம்பினர்.

                             *********************************************

'வெளிய போலாம் வரியா' அம்மாவை அழைத்தாள் சங்கவி.

'எங்கடி' அன்புக்கரசி கேட்டாள்.

'எங்க போறோம்னு சொன்ன தான் வருவியா. சும்மா வாம்மா'

இருவரும் கிளம்பினர்.

                           **********************************************

நேராக வண்டியை அவன் வீட்டு வாசலில் சென்று நிறுத்தினாள் சங்கவி.

பால்கனியில் நின்றிருந்தவன் கீழே இறங்கி வந்தான்.

'பரவாயில்லையே... நான் உன்ன மட்டும் தான் கூப்டேன். நீ உன்னோட அம்மாவையும் சேத்துக் கூட்டிட்டு வந்துருக்க. தனித்தனியாவா இல்ல ரெண்டு பெரும் ஒன்னாவா. எனக்கு ரெண்டுமே வசதி தான். நீங்களே முடிவு பண்ணிச் சொல்லுங்க' ஒவ்வொரு வார்த்தையிலும் நக்கல் தொனிக்க இளித்தான்.

வண்டியை நிறுத்திய சங்கவி, நிதானமாக நடந்து அவன் முன்னே நெருங்கி நின்றாள்.

அவன் கொஞ்சம் நகர்ந்து, 'வணக்கம் ஆண்ட்டி. வீட்ல யாரும் இல்ல. வாங்க உள்ள போலாம். பெட்ரூம் மேல இருக்கு' என்றான் சிரித்துக் கொண்டே.

அவன் திரும்பிய சமயம் செருப்பைக் கழட்டி அவன் கன்னத்தில் 'பளார் பளாரென' அறைந்தாள் சங்கவி. நிலைகுலைந்த அவன் தரையில் விழுந்தான். விழுந்தவனின் கழுத்தில் குரல்வளையை தன் இடது காலை போட்டு அழுத்தினாள். குதி உயர்ந்த செருப்பால் அவனைச் சரமாரியாக அடித்தாள். உதட்டில் இருந்து ரத்தம் கசிந்தது.

அன்புக்கரசி அவளைத் தடுக்கவில்லை. சாந்த முகத்தில் ஆக்ரோஷமான சிரிப்போடு கைக்கட்டி நின்றிருந்தாள்.

கால் சட்டையின் ஜிப்பைக் கழட்டி அவன் குறியை வெளியே எடுத்தாள்.

"இதுக்காக தானடா இவ்வளவு அசிங்கமா நடந்துகிட்ட. இதோ... அப்டியே அறுத்தெரிஞ்சிருட்டுமா. சொல்லு. அறுத்தெரியட்டுமா. இந்த ஆறு இன்ச் அசிங்கம் இல்லனா அப்புறம் பொண்ணுங்களெல்லாம் வெறும் உடம்ப தெரியமாட்டாங்கள்ள. நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன்கூட நட்பா இருந்தனேனு நெனைச்சா எனக்கே என்மேல வெட்கமா இருக்கு. உன்ன பாத்தாலே கண்ணு ரெண்டும் கூசுது. அசிங்கம்டா நீ. எப்போ எனக்கே தெரியாம என்ன அசிங்கமா வீடியோ எடுத்தியோ அப்போவே நீ நரகல் ஆயிட்ட. மலம்டா நீ. மலம்" கையில் கத்தியோடு அவனை மிரட்டினாள்.

அவனின் உதடுகள் துடித்தன. கண்கள் கலங்கின. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். கால்கள் நடுங்குவதை அவன் உணர்ந்தானா எனத் தெரியவில்லை.

"வீடியோவ நெட்ல விட்ருவேன்னு சொன்னல. விடுடா. விட்டுட்டு உங்கம்மாகிட்ட போய் காமி. உன்னமாதிரி ஜென்மத்த பெத்தெடுத்ததுக்கு ரொம்ப பெருமைப்படுவா. பெத்த வயிறு அப்டியே குளுந்து போய்டும். போ.. போய் காட்டு."

காலருகிலிருந்த கல்லைத் தூக்கியெறிந்தாள். அருகிலிருந்த காரில் பட்டு கண்ணாடி உடைந்தது.

அவன் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு எழுந்தாள் சங்கவி.

வண்டியைத் திருப்பி நிறுத்தியவாறு தயாராக நின்றாள் அன்புக்கரசி.

சுருங்கிய அவனது குறி உணர்ச்சியற்றதாய் தொங்கிக் கொண்டிருந்தது. விழுந்த இடத்திலிருந்து எழவே இல்லை அவன்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...