பணங்காசு முக்கியமா போச்சு
சொமந்த கட்டயே சொமையா ஆச்சு
சொந்தபந்தம் பாரமாச்சு
நெஜமெல்லாம் நீர்த்து போச்சு
போற வழிக்கு
நெனப்பு ஒன்னே சொந்தமாச்சு
ஒறக்கம் இல்லமா ஒழைச்சேன்
ஒதுங்க ஒரு எடம் இல்ல யப்போ
ஆச ஆசயா வளத்தேன் அப்போ
அரவயித்து சோத்துக்கு
நாதியில்ல இப்போ
தூணா இருந்தவ போனதும்
தொரத்திபுட்டான் மகனவனும்
கார் நிறுத்த எடம் இருக்கு வீட்டுல
அத்தனுக்கு கட்டில் போட
எடமில்ல மனசுல
காடு போற
வயசாயிடுச்சு பாத்துக்க
கடேசி வர காப்பாத்துவான்னு
கண்ட கனவெல்லாம்
பாழாயிடுச்சு கேட்டுக்க
பீ மூத்திரம் கழுவக் கூட கை எழல
கண்ணீரா வருது மக்கா
கண்ண மூடி படுத்துக்கறன்
இதுவே கடேசி ராவாக்கிடு
கூற்றுவா
கார்த்திக் பிரகாசம்...
சொமந்த கட்டயே சொமையா ஆச்சு
சொந்தபந்தம் பாரமாச்சு
நெஜமெல்லாம் நீர்த்து போச்சு
போற வழிக்கு
நெனப்பு ஒன்னே சொந்தமாச்சு
ஒறக்கம் இல்லமா ஒழைச்சேன்
ஒதுங்க ஒரு எடம் இல்ல யப்போ
ஆச ஆசயா வளத்தேன் அப்போ
அரவயித்து சோத்துக்கு
நாதியில்ல இப்போ
தூணா இருந்தவ போனதும்
தொரத்திபுட்டான் மகனவனும்
கார் நிறுத்த எடம் இருக்கு வீட்டுல
அத்தனுக்கு கட்டில் போட
எடமில்ல மனசுல
காடு போற
வயசாயிடுச்சு பாத்துக்க
கடேசி வர காப்பாத்துவான்னு
கண்ட கனவெல்லாம்
பாழாயிடுச்சு கேட்டுக்க
பீ மூத்திரம் கழுவக் கூட கை எழல
கண்ணீரா வருது மக்கா
கண்ண மூடி படுத்துக்கறன்
இதுவே கடேசி ராவாக்கிடு
கூற்றுவா
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment