நான்கு மணிக்கே இருட்டி விட்டது
வீடெங்கும் மழை பெய்யும் சத்தம்
நத்தையாய் ஊர்கிறது
நகக் கண்களில் சுடும்
நின் விரல் சுவாசம்
யாருமற்ற அறையில் எக்களிப்பு கூச்சலுடன்
மெல்ல மெல்லப் பிரம்மாண்டமாய் விரிகிறது
சுவர்களில் உன் பிம்பம்
மரணபயம் வியர்வையோடியது
இருளைக் கிழித்துக்
கடித்துக் குதறித் தப்ப முயன்ற
கடைசி சிணுக்கில்
ஊறும் இருட்டிலே தள்ளி
தாழிட்டது
இரக்கமற்றவனுக்குமான நின்
கருணையின் சிரிப்பு
கார்த்திக் பிரகாசம்...
வீடெங்கும் மழை பெய்யும் சத்தம்
நத்தையாய் ஊர்கிறது
நகக் கண்களில் சுடும்
நின் விரல் சுவாசம்
யாருமற்ற அறையில் எக்களிப்பு கூச்சலுடன்
மெல்ல மெல்லப் பிரம்மாண்டமாய் விரிகிறது
சுவர்களில் உன் பிம்பம்
மரணபயம் வியர்வையோடியது
இருளைக் கிழித்துக்
கடித்துக் குதறித் தப்ப முயன்ற
கடைசி சிணுக்கில்
ஊறும் இருட்டிலே தள்ளி
தாழிட்டது
இரக்கமற்றவனுக்குமான நின்
கருணையின் சிரிப்பு
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment