நேற்று
என் துரோகியைச்
சந்தித்தேன்
'நீ தான் கடைசி'
இப்போதெல்லாம்
யாருக்கும் துரோகம் நினைப்பதில்லையெனச்
சத்தியம் செய்தான்
சிரித்தேன்
வேண்டுமானால்
என் புதிய நண்பனிடம் கேள்
என்றான் அருகிலிருந்தவனைச்
சுட்டிக்காட்டி
மீண்டும் சிரித்தேன்
நம்பு
இல்லையேல்
கொன்று விடு என்றான்
கெஞ்சும் குரலில்
நம்புகிறேன்
ஆனால்
நீ துரோகம் செய்ததை தான்
இன்றுவரை நம்ப முடியவில்லை
என்னால் என்றேன்
அழுதேவிட்டான்
கார்த்திக் பிரகாசம்...
என் துரோகியைச்
சந்தித்தேன்
'நீ தான் கடைசி'
இப்போதெல்லாம்
யாருக்கும் துரோகம் நினைப்பதில்லையெனச்
சத்தியம் செய்தான்
சிரித்தேன்
வேண்டுமானால்
என் புதிய நண்பனிடம் கேள்
என்றான் அருகிலிருந்தவனைச்
சுட்டிக்காட்டி
மீண்டும் சிரித்தேன்
நம்பு
இல்லையேல்
கொன்று விடு என்றான்
கெஞ்சும் குரலில்
நம்புகிறேன்
ஆனால்
நீ துரோகம் செய்ததை தான்
இன்றுவரை நம்ப முடியவில்லை
என்னால் என்றேன்
அழுதேவிட்டான்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment