நெடுங்காலமாக
என் சுதந்திரத்தின் சாவி
துருப்பண்டி கிடக்கிறது
உன் சட்டைப்பையில்
அதன் இருப்பே
பொன்னாய் ஜொலிக்கிறது
உந்தன் சுதந்திர கிரீடத்தில்
முதல் மாணிக்கமாக
விரல்களை வெட்டியெடுத்த பின்னும்
கரம் இருக்கிறதேயென்ற
ஆசுவாசத்தில் இருளடையும்
அடிமை நாட்கள்
நரகத்தின் வாசலில் ஒலிக்கும்
யாசக குரலின்
ஓலங்கள்
பிறந்தது பிறந்துவிட்டேன்
பிடித்தது போல் வாழவிடு
இனியேனும்
இன்னொரு முறை பிறக்கவே மாட்டேன்
கார்த்திக் பிரகாசம்...
என் சுதந்திரத்தின் சாவி
துருப்பண்டி கிடக்கிறது
உன் சட்டைப்பையில்
அதன் இருப்பே
பொன்னாய் ஜொலிக்கிறது
உந்தன் சுதந்திர கிரீடத்தில்
முதல் மாணிக்கமாக
விரல்களை வெட்டியெடுத்த பின்னும்
கரம் இருக்கிறதேயென்ற
ஆசுவாசத்தில் இருளடையும்
அடிமை நாட்கள்
நரகத்தின் வாசலில் ஒலிக்கும்
யாசக குரலின்
ஓலங்கள்
பிறந்தது பிறந்துவிட்டேன்
பிடித்தது போல் வாழவிடு
இனியேனும்
இன்னொரு முறை பிறக்கவே மாட்டேன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment