தன் வயதையொத்த
இளம் நங்கையொருத்தி
குதிரையில் ஏறி அமர்வதைக் கண்டதும்
இவளே ராஜ்ஜியத்தை ஆளும்
மகாராணியைப் போல் உணர்ந்தாள்
குழந்தைகள் மணலில் கோட்டை
கட்டுவதைப் போல
இல்லாத கோப்புகளில்
கையெழுத்து வரைந்து
கரங்களைக் காற்றில் வீசி
புது ஆணைகள் இட்டாள்
'தங்களின் உத்தரவுப்படியே மகாராணி'
சேவகன் கோலத்தில்
பிரதிவாதம் இல்லாமல்
ஏழு போல் வளைந்து
கட்டின லுங்கியோடு
வாய் பொத்தி நிற்கும்
கணவனைப் பார்த்து
உள்ளூர எக்களித்தாள்
புதிதாய் முளைத்தது போல்
வெடுக்கென வெயில் உரைக்கக்
கால் தவறி பாதாளத்தில்
விழுந்தவளாய்
நிகழில் விழித்தவளின்
பாதங்களை நனைத்தவாறே
தற்காலிக சுவடுகளை
அடையாளமில்லாமல் அழித்துவிட்டு
வந்தவழி திரும்பிக் கொண்டிருந்தன
அலைகள்
குழந்தையைத் தூக்கிக் கொண்டு
திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்
குதிரையின் நிழல்
பின் தொடர்ந்தது
அவளை
கார்த்திக் பிரகாசம்...
இளம் நங்கையொருத்தி
குதிரையில் ஏறி அமர்வதைக் கண்டதும்
இவளே ராஜ்ஜியத்தை ஆளும்
மகாராணியைப் போல் உணர்ந்தாள்
குழந்தைகள் மணலில் கோட்டை
கட்டுவதைப் போல
இல்லாத கோப்புகளில்
கையெழுத்து வரைந்து
கரங்களைக் காற்றில் வீசி
புது ஆணைகள் இட்டாள்
'தங்களின் உத்தரவுப்படியே மகாராணி'
சேவகன் கோலத்தில்
பிரதிவாதம் இல்லாமல்
ஏழு போல் வளைந்து
கட்டின லுங்கியோடு
வாய் பொத்தி நிற்கும்
கணவனைப் பார்த்து
உள்ளூர எக்களித்தாள்
புதிதாய் முளைத்தது போல்
வெடுக்கென வெயில் உரைக்கக்
கால் தவறி பாதாளத்தில்
விழுந்தவளாய்
நிகழில் விழித்தவளின்
பாதங்களை நனைத்தவாறே
தற்காலிக சுவடுகளை
அடையாளமில்லாமல் அழித்துவிட்டு
வந்தவழி திரும்பிக் கொண்டிருந்தன
அலைகள்
குழந்தையைத் தூக்கிக் கொண்டு
திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்
குதிரையின் நிழல்
பின் தொடர்ந்தது
அவளை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment