கணக்கு வாத்தியாரானது
சுயத்தின் சாதுரியமான
சூழ்ச்சி
கூட்டலும் பெருக்கலும்
தினசரி பணி
வகுப்பறையில்
கரும்பலகையைத் தொட்டதும்
அப்பாவின் ஞாபகம் வந்துவிடும்
தினமும்
காலத்துக்கும் கூட்டியும் பெருக்கியும்
சாலையிலேயே
வாழ்நாள் கழிந்து போனவர்
விட்டுப் போன சமன்பாடுகளுடன்
வேறொரு பாதையில்
கூட்டல் பெருக்கலோடு
துரத்தியடித்த வாழ்வை
வகுக்கிறேன்
துப்பரவு புரிந்த
கணக்கு வாத்தியார் அவர்
கணிதமறிந்த
துப்புரவுத் தொழிலாளி நான்
ஆயுதம் மட்டும் வேறு
Comments
Post a Comment