சூல் விழிகளுக்குக்
குடை பிடித்தது போல்
அடர்த்தியான புருவங்கள்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
சீராய் கலைந்த இழைகள்
பூரணத்தின் உச்சம்
கம்பிரமும் கூர்பார்வையும்
தனித்த அடையாளமென
பெண்ணானவர்கள் பேசிக் கொள்வர்
தெளிவானவள்
என்ன வேண்டும் என்றறிந்தவள் ஆதலால்
என்னை வேண்டாம் என்றதில்
வியப்பில்லை
Comments
Post a Comment