அந்த அழகான கனவு இப்படித்தான் இருந்தது
நங்கையவளின் இதழ்களில் பதிந்தது
வண்ண வண்ண பூக்களின் நடுவே
தென்றலின் லயத்திற்கு
சின்னஞ்சிறு சிறகுகளில் வயலின் மீட்டும்
வண்ணத்துப்பூச்சியொன்று
மலரென நம்பி
தேனினும் இனிய அமுதம்
உண்ணக் கண்ட வண்ணத்துப்பூச்சி
இவள் இதழ்களை விட
மலரொன்றும் மெல்லியதல்ல என
உச்சிக் கொட்ட
நாணத்தில் உடலெங்கும் முளைத்தன
இதழ்கள்
அமிர்தையானாள் நங்கை
Comments
Post a Comment