உயிரானவர்கள் உதறித் தள்ளிய
நிராதவரான நிலையில்
கண்ணீர் மல்க
தலைவிரி கோலமாய் நிற்கும்
ஓர் இளம் பெண்ணை நினைவூட்டும்
அந்த மரம்
சவத்தைப் போல்
அசையாமல் நிற்கும்
அதன் அமைதி
பெரும் அச்சமூட்டியது
புல்லோ
புத்தனோ
எல்லோரும் வாழவென
ஒரு காலம் உண்டு
வசந்த காலம் வரும்
இலை
காய்
கனி
பூ என யாவும் தோன்றும்
அன்று
பருவத்தில்
காதலனுடன் முதல் முத்தம் பதிந்த
நாணத்துடன் காற்றை தருவிக்கும்
இந்த மரம்
அப்போது
பூத்துக் குலுங்கும்
எண்ணற்ற மலர்களின் தேனை உறிஞ்சி
என் காதலிக்கு
ஓர் கவிதை வரைவேன்
Comments
Post a Comment