கடினமாய் உழைத்துக் கட்டமைத்த பிம்பம்
கண்ணெதிரே சில்லு சில்லாய்
உடைகிறது
பதவி உயர்வு கிடைத்தமைக்கு
பாராட்டு வாசித்த
வயிற்றெரிச்சல் பீடித்த
நொறுங்கிய நண்பன்
'உன்னிடம் இருக்கும் இரண்டு
இல்லை என்னிடம்' எனப்
பெருமூச்சு விடுகிறான்
மார்பகமும் யோனியும்
அவ்வப்போது
சிறு சிறு ஒத்துழைப்பும் நல்கினால்
பெண்ணானவள்
எதையும் சாதித்து விடலாம்
வக்கற்றவர்களின் வாய் ஜாலம்
பெண்ணின்
தகுதியையும் திறமையையும்
அவளது யோனிக்குள் புதைக்க முனையும்
மூளையின் இடத்தில் குறியைச்
செருகியிருக்கும் தற்குறி அவனிடம்
எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது
அத்தனைக்கும் மேலானது
அறிவு
Comments
Post a Comment