பூட்டிய அறைக்குள் அமர்ந்திருக்கிறேன்
வெளியேறும் பெரும் மூச்சு
அறையெங்கும் புழுக்கமாய் நிறைகிறது
சாவியிடும் துளைகளின் வழியே
பிரபஞ்ச பெருவெளியின் ஒளிக் கீற்று மோனமாய் கவிழ்கிறது
பகலில் இருட்டையும்
இரவானால் ஒரு சொட்டு வெளிச்சத்தையும்
தேடியலைகிறது பேய்மனம்
சீக்கிரமாய்
இன்று சென்று
நேற்றில் வருவாயா?
Comments
Post a Comment