Skip to main content

தேவதையின் இரட்சிப்பு

நேற்று முதல்
புதிதாய் சிரிக்கிறாய் என்கிறார்கள்
மகள் மீட்டுத் தந்த
எந்தன் பழைய‌ சிரிப்பது
உண்டான ஒற்றை மலருக்காக
ஒட்டு மொத்த மரமும் 
உயிர்தாங்கி நிற்பது போல் 
தேவதை இரட்சிப்பின் பொருட்டு 
துவண்ட பருவமும் 
தொலைத்த காலமும் 
வேர்விட்டு துளிர்க்கிறது
அவர்களுக்குத் தெரியாத இன்னொரு ரகசியம்  
தாயின் கருவறையிலிருந்து
மகளின் கரங்களில்
மறுமுறை பிரசவித்திருக்கிறேன்

Comments