Skip to main content

Posts

Showing posts from July, 2015

ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்...

கடல் மண்ணில் கால் தடம்  பதித்து இந்திய இளைஞர்களின் மனதில் தன்னம்பிக்கை விதை விதைத்த உறங்கும் போது வருவது கனவல்ல ஒருவனை உறங்க விடாமல் தவிக்க விடுவதுதான் கனவு என்பதை உணர வைத்த சிறகில்லாமல் பரிதவித்துக் கொண்டிருந்த இந்தியர்களுக்கு "அக்னி சிறகுகளை" அளித்த உலக நாடுகளுக்கு  மத்தியில் நம் நாட்டிற்கு தனி அங்கீகாரத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தி கொடுத்த அப்துல் கலாம் என்ற ஆத்மா தன் ஆயுளை முடித்து கொண்டுள்ளது...!!! அந்த ஆத்மா ஓய்வைத் தேடி கொண்டாலும் அவரின் நினைவலைகள் என்றென்றும் நம் ஆழ்மனதில் ஓயாமல் ஓடோடிக் கொண்டே இருக்கும்... கார்த்திக் பிரகாசம்...
பார்வையை எறிந்தாள்..!!! கண்களில் கரைந்தாள்...!!! இதழ்களில் இணைந்தாள்...!!! விரல்களில் வியர்த்தாள்...!!! காமத்தில்  எரித்தாள்...!!!   நாணத்தில் நனைத்தாள்...!!! காதலில் துளிர்த்தாள்...!!! கார்த்திக் பிரகாசம்...
ஆயிரமாயிரம் யானைகளும் கட்டுக்குள் அடங்கா குதிரைகளும் மைதானத்தில் பெரும் போருக்கு தயாராக இருப்பதை போல் கருமேகங்கள் ஒன்று திரண்டு மாநகரத்தின் மையப் பகுதியைக் காரிருளாக்கி மாமழை பொழிய ஆயத்தமாகி கொண்டிருக்கின்றன...!!! கார்த்திக் பிரகாசம்...
உன் உடல் மொழி இசைவில் உளி பட்டதாய் துயில் கெட்டதாய் தளிர் தொட்டே தாங்க இயலாமல் தவிக்கின்றன என் விழிகள்...!!! கார்த்திக் பிரகாசம்...
மாரி...!!! "மாரி" மகிழ்ச்சியில் சென்னை குதுகலிக்கிறது...!!! ஆனால் இன்று கொஞ்சம் நல்ல மாரி...!!! நாளை ரொம்ப வேற மாறி...!!! கார்த்திக் பிரகாசம்...

ஜூலை 16, 2004...

  அன்று பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு சந்தோசமாக வர வேண்டிய   குழந்தைகள் சாம்பலாகத் தான் வந்து சேர்ந்தன .   94 பிஞ்சு குழந்தைகளை அள்ளி எறித்துச் சென்ற நாள் .     கும்பகோணத்தின் ஒரு பள்ளிக்கூடத்தில்   முறையான கட்டமைப்புகளும் , போதிய பாதுகாப்பு வசதிகளும் இல்லாததால் 94 குழந்தைகள் தீயின் கோரப்பசிக்கு இரையாயின .     பலியான குழந்தைகளின் சாம்பல் , வரலாற்றின் சுவுடுகளில் தன் பதிவுகளை மிகுந்த அழுத்தமாக எழுதிச் சென்றுவிட்டன..   கார்த்திக் பிரகாசம்...
வயிற்றுக்குத் தெரிவதில்லை சாமானியனின் சட்டைப்பையில் காசில்லாமல் வாழ்க்கை வறண்டுக் கொண்டிருக்கிறது என்று...!!! பசியும் பரிதாபம் பார்ப்பதில்லை பாமரனின் பாக்கெட்டில் பணம் இல்லை என்று...!!! கார்த்திக் பிரகாசம்...
ஒவ்வொரு நாளும் ஓடோடி வரும் பிரச்சனைகள் உயிரை உயிர்ப்புடன் தாங்கி பிடிக்கின்றன...!!! பிரச்சனைகளை  சந்திக்க தெரிந்தவன் மனிதனாகிறான்...!!! பிரச்சனைகளை சந்திக்க சமாளிக்க முடியாதவன் பிணமாகிறான்...!!! கார்த்திக் பிரகாசம்...
சுயநலமிக்கவனால் மட்டும் தான் சுற்றங்களையும் சூழ்நிலைகளையும் சுதந்திரமாகவும் சாதுரியமாகவும் அணுக முடிகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...

மலாலா பிறந்தநாள்..

ஸ்வாட் பள்ளத்தாக்கின் சரித்திர தேவதை.. பெண் கல்விக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுத்து அதற்கு பரிசாக துப்பாக்கிக் குண்டை தன் தோள்பட்டையில் பதக்கமாக சுமந்த இளங்கன்றின் பிறந்த நாள்...                                                                                                             கார்த்திக் பிரகாசம்..
வசந்தமும் நிசப்தமும் உன் வாழ்க்கையின் வழியெங்கிலும் நிறைந்திட அன்பையும் பண்பையும் பாசத்தையும் உனக்கு பகிரவும் நீ பகிர்ந்து கொள்ளவும் நீ விரும்புபவர்களும் உன்னை விரும்புவர்களும் என்றும் உன்னருகில் இருந்திட எவனோ ஒருவனின் அன்பான அழகான ஆழமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...

தலைக்கவசம்...!!!

     தமிழ் நாட்டில் கடந்த சில வாரங்களாக எந்த பக்கம் திரும்பினாலும் "ஹெல்மெட் பிரச்சனை" தான் பிரதான பேச்சாகவும் வாதமாகவும் எதிரொலித்து கொண்டிருக்கிறது... கட்டாய தலைக் கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்ததை ஆதரித்தும், எதிர்த்தும் பல குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.        உண்மையில் பார்த்தால், இதில் ஆதரிக்கும் குரல்களை விட எதிர்க்கும் குரல்களே அதிகம்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களும் அதிகம். தலைக்கவசம் அணிந்தால் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க முடியவில்லை என்றும், ஹார்ன் அடித்தால் சரியாக கேட்பதில்லை என்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் தலைக் கவசத்தை எதிர்ப்பவர்களால் முன் வைக்கப்படுகின்றன.. அதிலும் அதிகமானவர்களால் முன் மொழியப்படும் குற்றச்சாட்டு என்பது தலைக் கவசம் அணிந்தால் முடி உதிர்ந்து விடுகின்றன என்பது தான்...             அதே போல், தலைக்கவசம் அணிவதை ஆதரிப்பவர்கள் கூட  கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றன.. இலவச கிரைண்டர், இலவச மிக்ஸி, இலவச மடிக் கணினி என்று இலவசங்களை அள்ளித் தரும் அரசாங்கம் உயிரை காக்கு...
நண்பனின் உடன்பிறவா தங்கையின் பிறந்த நாளுக்காக...!!! உன் வருகையால் உறவாக உறவுக்காக ஒரு உடன்பிறப்பு என் தாய் கருவில் சுமக்காமலே உண்டாயிற்று...!!! உடன்பிறந்தவள் இல்லாத உருக்கமும் உடைந்தது உன்னால்...!!! உன் முகத்தை பார்க்கும் தருணம் புன்னகைக்கு ஓய்வில்லை கவலைகளுக்கு இடமில்லை துன்பங்களுக்கு முகவரியில்லை கனவுகளுக்கு கடிவாளமில்லை...!!! காணும் போதெல்லாம் காற்றையும் புன்னகைத்துக் கொண்டிருக்கும் பூக்களையும் ஆழ்கடலில் முழ்கியிருக்கும் முத்துக்களையும் மிதந்து போகும் மேகங்களையும் ஒரே மூச்சில் அழைக்கிறேன் உனக்கு "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" சொல்லிட...!!! கார்த்திக் பிரகாசம்...

கடல்...!!!

அழுக் குரலோ..!! ஆனந்த குதூகலமோ..!! காலைத் தொடுவது  நுறையோ...!!!  சொல்லி புரியாத குறையோ...!!! சுமந்து வருவது உப்புக் காற்றோ...!!! எடுத்த பல உயிர்களின் மூச்சுக் காற்றோ...!!! மூழ்கி கிடப்பது உப்பு படிமங்களோ...!!! மூச்சை தொலைத்த உயிர்களின் பதிவுகளோ...!!! தேங்கி கிடக்கும் தண்ணீரோ...!!! கோபம் கொண்ட கொதி நீரோ...!!! மனதை மயக்கும் அதிசயமோ...!!! உயிரை பறிக்கும் ஆபத்தோ...!!! கார்த்திக் பிரகாசம்...
உணர்வுகளுக்கு உள்ளத்தில் உயரிய இடம் கொடுக்காமல் உகந்த இடம் மட்டும் கொடுத்தால் வாழ்க்கையில் கடின கஷ்டங்களையும் வலிய வலிகளையும் எளிதாய் தகர்த்தெறியலாம்...!!! கார்...
மாதச் சம்பளக்காரன்... கையில் காசு இருக்கும் போது கணக்குப் பார்த்து செலவு செய்வதில்லை...!!! கணக்குப் பார்த்து செலவு செய்ய நினைக்கும் போது கையில் காசு இருப்பதில்லை...!!! கார...
உன் துகில் அழகில்  என் துயில் அடங்கும்...!!! உன் தாமரை இதழ்களில் என் தாகம் தீரும்...!!! உன் சிற்ப விழிகளில்  என் சித்திரம் சேரும்...!!! உன் சிந்தனையில்  என் சிந்தாந்தம் சிதறும்...!!! உன் மஞ்சள் முகத்தின் மச்சத்தில்  என் மாலைப் பொழுது மயங்கும்...!!! கார்த்திக் பிரகாசம்... 
வீதியில் இருக்கும் மரங்களையெல்லாம் ஒரு கணம் மனம் சிந்திக்காமல்  வெட்டி அழித்து விடுகிறோம்...!!! ஆனால் வீட்டு மொட்டை மாடியில் தொட்டியில் வளரும்  "டேபிள் ரோஸ்" செடி  அழிந்து விட்டாலோ   நாள் முழுதும்  வருந்திக் கொண்டிருக்கிறோம்...!!! கார்த்திக் பிரகாசம்...
தலைக் கவசம் அணிவது அவரவர் தலையெழுத்து மாறாமல் இருப்பதற்காகத் தானே தவிர அது ஒன்றும் அரசாங்கம் நமக்கு கொடுத்த சாபமோ தண்டணையோ அல்ல...!!! காலுக்கு காலணி அணிவது எவ்வளவு அ...