Skip to main content

தலைக்கவசம்...!!!

     தமிழ் நாட்டில் கடந்த சில வாரங்களாக எந்த பக்கம் திரும்பினாலும் "ஹெல்மெட் பிரச்சனை" தான் பிரதான பேச்சாகவும் வாதமாகவும் எதிரொலித்து கொண்டிருக்கிறது... கட்டாய தலைக் கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்ததை ஆதரித்தும், எதிர்த்தும் பல குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. 

      உண்மையில் பார்த்தால், இதில் ஆதரிக்கும் குரல்களை விட எதிர்க்கும் குரல்களே அதிகம்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களும் அதிகம். தலைக்கவசம் அணிந்தால் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க முடியவில்லை என்றும், ஹார்ன் அடித்தால் சரியாக கேட்பதில்லை என்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் தலைக் கவசத்தை எதிர்ப்பவர்களால் முன் வைக்கப்படுகின்றன.. அதிலும் அதிகமானவர்களால் முன் மொழியப்படும் குற்றச்சாட்டு என்பது தலைக் கவசம் அணிந்தால் முடி உதிர்ந்து விடுகின்றன என்பது தான்...
    
       அதே போல், தலைக்கவசம் அணிவதை ஆதரிப்பவர்கள் கூட  கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றன.. இலவச கிரைண்டர், இலவச மிக்ஸி, இலவச மடிக் கணினி என்று இலவசங்களை அள்ளித் தரும் அரசாங்கம் உயிரை காக்கும் தலைக் கவசத்தை ஏன் இலவசமாக அளிக்கக் கூடாது என்பதே அந்த கோரிக்கை ஆகும்..

       தலைக்கவசத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. தலைக்கவசம் அணிந்தால் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க முடியவில்லை என்ற கருத்து கேட்க நியாமானதாக இருக்கலாம் ஆனால் உண்மையில் அப்படி இல்லை. பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்க இரு சக்கர வாகனத்தின் இரு பக்கங்களிலும் இடது மற்றும் வலதுப்புற கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விடயம் முடி கொட்டுவது. தலைக்கவசம் அணிவதால் மட்டுமே முடி உதிரும் பிரச்சனை என்பது உண்மையில் சிலருக்கு ஏற்படலாம். ஆனால் அவர்கள் யோசிக்க வேண்டிய விடயம் உயிரை விடவா தலைமுடி முக்கியம்...???

      ஆதரிப்பவர்களில் ஒருசாரர் கேட்பது போல, அனைத்தையும் அரசாங்கமே இலவசமாக தந்துவிட்டால் பிறகு நமக்கு என்னதான் வேலை...!!! இலவசம் எந்தவொரு தேவைக்கும் நிரந்தர தீர்வாகாது. மாறாக இனி இருசக்கர வாகனங்கள் விற்கும் நிறுவனங்களே கட்டாயமாக தலைக் கவசத்தையும்  கொடுக்க வேண்டும் என்று கேட்கலாம்...! 

       தலைக்கவசம் அணிவதும், அணிய சொல்வதும் தண்டனை அல்ல... 
 அது ஒரு தற்காப்பு.. காலுக்கு காலனி அணிவது எவ்வளவு அவசியமோ அதை விட ஆயிரம் மடங்கு அவசியமானது, இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்குக் கவசம் அணிய வேண்டியது....

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...